Published : 01 Sep 2018 10:29 AM
Last Updated : 01 Sep 2018 10:29 AM

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

அற்புதமான வாசிப்பனுபவத்தை வழங்கும் எழுத்துகளுக்குச் சொந்தக்காரரான பா.வெங்கடேசனின் ‘ராஜன் மகள்’, 16 ஆண்டுகள் கழித்து மறுபதிப்பு கண்டிருக்கிறது. நான்கு சிறுநாவல்களின் தொகுப்பான இந்நூல், புனைவுகள் மீது காதல் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று. அபூர்வமான கதைசொல்லல் முறையைக் கைக்கொண்டிருக்கும் பா.வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’, ‘பாகீரதியின் மதியம்’ நாவல்கள் தமிழின் மிக முக்கியமான படைப்புகள். பிரம்மாண்டமான அவரது படைப்புலகத்துக்குள் நுழைய ‘ராஜன் மகள்’ ஒரு திறப்பாக இருக்கும்.

ராஜன் மகள், பா.வெங்கடேசன்

காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.300,  9677778863

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x