Last Updated : 22 Sep, 2018 10:07 AM

 

Published : 22 Sep 2018 10:07 AM
Last Updated : 22 Sep 2018 10:07 AM

பாலின வேறுபாட்டை மறப்போம்

பாலின வேறுபாட்டைப் பொருட்படுத்தாத பெண்கள், அதிக சுயமுனைப்புடன் மன உறுதியுடன் முன்னேறுகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. மனிதத் தன்மைகளுக்கு சிந்தனைகளுக்கு உழைப்புக்கு பாலின வேறுபாடு இல்லை என்று பெண்கள் நினைத்துச் செயலாற்றும் முறையை இந்தக் கருத்தாக்கம் முன்னிறுத்துகிறது. பெண்களின் முன்னேற்றதுக்கு சமுதாயம் ஏற்படுத்தும் தடைகளை மறுக்கவில்லை. அதுபோல, பெண்கள் பெண்மையை விட்டுவிட வேண்டும் என்றும் கூறவில்லை. ஆனால், பெண்களுக்கென சில குறிப்பிட்ட தன்மைகள் உண்டு, இல்லை என்பதை நிறுவி அவர்கள் செயல்பாட்டைக் கட்டுபடுத்துவதை மறுக்கிறது. இந்த ஆராய்ச்சியின் மற்றொரு முடிவு, பாலின வேறுபாட்டை மறுக்கும் பெண்கள் மத்தியில் ஆண்களின் மன உறுதி குறைகிறது என்கிறது. பாலின வேறுபாடு அடிப்படையில் வேலையைப் பகுத்துக் கொடுக்காமல் இருந்தால் சமுதாய முன்னேற்றம் துரிதமாகும்.

Ashely Martin & Katherine Phillips, “What ‘blindness’ to gender differences helps women see and do: Implications for confidence, agency, and action in male-dominated environments”.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x