Last Updated : 02 Jun, 2019 09:04 AM

 

Published : 02 Jun 2019 09:04 AM
Last Updated : 02 Jun 2019 09:04 AM

வீணாய்ச் சுமந்த கொலைப்பழி!

சுவாரசியமின்றி நகரும் புத்தகங்களையோ திரைப்படங்களையோ, ‘ஆவணப்படம் மாதிரி இருக்கு’ என்று சொல்லும் வழக்கம் உண்டு. இந்தக் கூற்றின் ஆயுட்காலம் இன்னும் சொற்ப காலம்தான். திரைப்படங்களை விஞ்சும் அளவுக்கு ஆவணப்படங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு உதாரணம், நெட்பிளிக்ஸ் வெளியிட்டிருக்கும் ‘அமேண்டா நாக்ஸ்’.

அமெரிக்க இளம் பெண் தனது படிப்புக்காக இத்தாலி சென்று, தன் உடன் தங்கியிருந்த தோழியைக் கொன்றுவிட்டதாகக் கொலைப்பழி சுமந்து, பல்வேறு கட்டுக்கதைகளால் ஏற்பட்ட அவமானத்தோடு நான்கு ஆண்டுகள் இத்தாலியில் சிறைவாசமும் அனுபவித்து, பிறகு இவ்வளவு நெருக்கடிகளிலிருந்து மீண்டு பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டிருக்கும் அமேண்டா நாக்ஸ் பற்றிய ஆவணப்படம்தான் இது.

இந்த வழக்கு மிகவும் பிரசித்திபெற்றது. இது தொடர்பாக, ஆயிரக்கணக்கான பக்கங்களில் புத்தகங்கள் வெளிவந்திருந்தாலும் அமேண்டாவின் ‘வெயிட்டிங் டு பி ஹியர்ட்’ எனும் சுயசரிதைக்குத் தனிக் கவனம் கிடைத்தது. அதுபோல, இந்த நெட்பிளிக்ஸ் ஆவணப்படத்துக்கும் ஒரு சிறப்பு உண்டு. ‘48 ஹவர்ஸ்’, ‘மர்டர் ஆன் ட்ரையல் இன் இத்தாலி’, ‘அமேண்டா நாக்ஸ்: தி அண்டோல்ட் ஸ்டோரி’ என்று பல்வேறு ஆவணப்படங்கள் வந்திருந்தாலும் நெட்பிளிக்ஸ் படத்தில்தான் அமேண்டா நாக்ஸ் மனம் திறந்திருக்கிறார்.

இந்த ஆவணப்படத்துக்காக, வழக்கோடு தொடர்புடைய பலரோடும் பேசியிருக்கிறார்கள். செல்போன் அழைப்புகள், குறுஞ்செய்திகள், சிறையில் நடைபெறும் உரையாடல் பதிவு, விசாரணைக் காணொலிகள், அறிக்கைகள் என எண்ணற்ற ஆவணங்களைச் சேகரித்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கொண்டு ஒரு திரில்லர் படத்துக்கு நிகரான திரைக்கதையோடு ஆவணமாக்கியிருக்கிறார்கள். ஒரு தனிமனிதராக, விசாரணை அதிகாரியாக, வழக்கறிஞராக, பத்திரிகையாளராக, திரைக் கலைஞராக சமூகமாக எல்லோருக்கும் இதிலிருந்து எடுத்துக்கொள்ள விஷயங்கள் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x