

கர்னாடக இசை நிகழ்ச்சிகளில் பிரதான லய (தாள) பக்கவாத்தியமாக இருப்பது மிருதங்கம். தாள வாத்தியங்களில் ராஜ வாத்தியமாக மதிக்கப்படும் மிருதங்கத்தை வாசிப் பதில் தனக்கென தனி பாணியை உண்டாக்கி முத்திரை பதித்தவர் பாலக்காடு டி.எஸ்.மணி அய்யர்.
கர்னாடக இசை உலகில் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேலாக, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், டி.கே.பட்டம்மாள் உள்ளிட்ட எண்ணற்ற இசை மேதைகளுக்கு பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்த பெருமைக்குரியவர்.
அவரது வாசிப்பில் வெளிப்பட்ட நுணுக்கங்க ளையும், நேர்த்தியையும் இன்றைய தலைமுறை யினர் காணொலி வாயிலாக காண்பதற்கும், ஒலி வடிவில் கேட்பதற்குமான ஏற்பாடுகளை குரு ஸ்மரணம் அறக்கட்டளை செய்ய உள்ளது.
கர்னாடக இசை உலகுக்கு பாலக்காடு மணி அய்யர் வழங்கிய பங்களிப்பு, விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதை இளம் கலைஞர்கள், ரசிகர்கள் பலரும் பயனுறும் வகையில் இசை சுற்றுலாக்கள் மூலமாகவும், கருத்தரங்குகள், மூத்த வித்வான்களின் விளக்க உரைகள் மூலமாகவும் குரு ஸ்மரணம் அறக்கட்டளை வழங்க இருக்கிறது.
குரு ஸ்மரணம் அறக்கட்டளையின் தொடக்க விழா சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் உள்ள ராகசுதா ஹாலில் வரும் 16-ம் தேதி ஞாயிறு மாலை 6.15 அளவில் நடக்க உள்ளது.
பாலக்காடு மணி அய்யரிடம் மிருதங்கம் கற்றுக் கொண்ட பிரபல மிருதங்க வித்வான் உமையாள் புரம் கே.சிவராமன், பிரபல எழுத்தாளரும், நாடக நடிகருமான பி.சி.ராமகிருஷ்ணா ஆகியோர் இதில் பங்கேற்று சிறப்பிக்க இருக்கின்றனர்.
குரு ஸ்மரணம் அறக்கட்டளையின் நோக்கங்கள், செயல்பாடுகள் பற்றியும், தனது குருவின் நினைவுகள் பற்றியும் உமையாள்புரம் சிவராமன் உரை நிகழ்த்துகிறார். பாலக்காடு மணி அய்ய ரின் அறுபதாண்டு கலை வாழ்க்கையின் முக்கிய மான தருணங்களை வெளிக்கொணரும் வகையி லான வினாடி - வினா நிகழ்ச்சியை வெங்கடாச் சலம் அய்யர் நடத்துகிறார். பல்வேறு கச்சேரிகளில் பாலக்காடு மணி அய்யர் வாசித்த மிருதங்க இசையின் சிறப்பு ஒலித்தொகுப்பும் நிகழ்ச்சியில் முக்கிய பகுதியாக இடம்பெறுகிறது.