

கவிஞரும் திரைப் படைப்பாளியுமான லீனா மணிமேகலையின் திரைப்படமான ‘மாடத்தி’யில் சில காட்சிகளைத் தணிக்கை வாரியம் நீக்கியதை அடுத்து டெல்லியில் உள்ள மத்திய தணிக்கை மேல்முறையீட்டு நடுவர் மன்றத்தை அவர் நாடியிருக்கிறார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் மிகவும் கீழ் நிலையில் உள்ள புதிரை வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பதின்வயதுச் சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையைப் பற்றிப் பேசும் படம் இது. “தணிக்கை வாரியம் திரைப்படத்துக்குச் சான்றிதழ்தான் வழங்க வேண்டுமே தவிர காட்சிகளை வெட்டுவது அதன் வேலையல்ல” என்கிறார் லீனா.