பிறமொழி நூலகம்: வீரமங்கை காயத்ரி தேவியின் சுயசரிதை

பிறமொழி நூலகம்: வீரமங்கை காயத்ரி தேவியின் சுயசரிதை
Updated on
1 min read

எ பிரின்சஸ் ரிமம்பர்ஸ்

காயத்ரி தேவி

ரூபா பப்ளிகேஷன்ஸ்

புதுடெல்லி - 110002

விலை: ரூ.595

இந்தியாவின் வடகிழக்கு மூலையில் கோலோச்சிய கூச்பிகார் மகாராஜாவின் மகளான காயத்ரி தேவி, ஐரோப்பியக் கண்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தவர். உயர் கல்வி பயின்றவர். புதுமைப் பெண்ணாக வளர்ந்தவர். 12 வயதில் சிறுத்தையை வேட்டையாடிய இவரது வீரம் பெரும் புகழ்பெற்றது. அரண்மனை வழக்கங்களில் ராணிகளுக்கு விதிக்கப்பட்ட தலையலங்காரம் முதல் ஆடையலங்காரம் வரை அனைத்திலும் புதுமைகளைப் புகுத்தினார். தலைக்கு முக்காடு போடும் வழக்கத்தை நிறுத்தச்செய்தார். ஜெய்ப்பூரில் மகளிர் கல்வியை வளர்க்க தனி பள்ளிக்கூடத்தை நிறுவினார். அன்றாடம் மக்களின் கோரிக்கைகளை, குறைகளைக் கேட்டதால் அரசியல் ஆர்வம் ஏற்பட்டு மூதறிஞர் ராஜாஜி தொடங்கிய சுதந்திரா கட்சியில் சேர்ந்தவர் அவர்.

அது மட்டுமல்லாமல் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் அதுவரை இருந்திராத வகையில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். கணவருக்கு ஸ்பெயின் தூதர் பதவியை காங்கிரஸ் அரசு அளித்தபோதும் அக்கட்சியில் சேர மறுத்து கொள்கைப் பிடிப்போடு வலம்வந்தார். இப்படியான ஆளுமையின் ராஜ வாழ்க்கையை அருகிலிருந்து பார்த்தவர்களைவிட ராணியே எழுதினால் எப்படி இருக்கும்? இந்த சுயசரிதை எழுதப்பட்டு இதுவரை 36 பதிப்புகள் காணும் அளவுக்கு சுவாரசியமாக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in