

இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை எழுதியுள்ள த.ஜெ. பிரபுவின் நாவல் இது. நாவலின் கதைக்களமும் அந்தத் துறைதான். ஆறு அங்கங்களாக எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல், 1980-களுக்கு உயிர்கொடுத்திருக்கிறது. எண்பதுகளில் தமிழகத்தில் தொழிற்சங்க அரசியல் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் அதுசார்ந்த தொழிலாளர்களின் நடவடிக்கைகள், நிர்வாகங்களின் எதிர்வினைகள் போன்றவற்றைத் துல்லியமாகப் பதிவுசெய்துள்ளார் ஆசிரியர். அரசியல் சார்ந்த லட்சியக் கனவுகளைச் சிதறடிக்கும் யதார்த்தத்தை இந்தப் படைப்பின் வழியாக விரிவாகப் பேசுகிறார் த.ஜெ. பிரபு.
விடியலை நோக்கி முடிவற்ற பயணம்...
த.ஜெ. பிரபு
வெளியீடு: ஜெ. அனிதா பிரபு
ப்ளாட் 45, வள்ளலார் தெரு,
செல்லி நகர், சேலையூர்,
சென்னை-73.
தொலைபேசி: 9840117920
விலை: ரூ.250