Published : 03 Mar 2018 10:16 AM
Last Updated : 03 Mar 2018 10:16 AM

பிறமொழி நூலறிமுகம்: மும்பை வாழ்க்கைத் தரிசனம்

மும்பை வாழ்க்கைத் தரிசனம்

மு

ம்பை பெருநகரத்தைப் பின்னின்று இயக்கும் லட்சக்கணக்கானவர்களின் ‘உப்புச்சப்பில்லாத’ வாழ்க்கையை, அவர்களிடையே நிரம்பி வழியும் தன்னம்பிக்கையை, ஆற்றாமையை, விரக்தியை, குரோதத்தை உள்ளபடி சித்தரிக்கும் கதைகளின் தொகுப்பு இந்நூல். கன்னட மொழியில் புகழ்பெற்ற கவிஞரும் ஊடகவியலாளருமான ஜயந்த் கைகினி, பத்தாண்டு காலப் பகுதியில் பல்வேறு இதழ்களில் மும்பை நகர வாசிகளில் இதுவரை கண்ணுக்குத் தென்படாத மக்களின் வாழ்க்கை யைப் பற்றி எழுதிய 16 கன்னட மொழிச் சிறுகதைகள் தொகுப்பு. எவ்வித ஜோடிப்பும் இல்லாத கைகினியின் எழுத்து, வாசகரிடையே உயிர்ப்புக்கான போராட்டத்தின் அவசியத்தைச் சுட்டிக்காட்டி, வாழ்க்கை குறித்த நம்பிக்கையை வளர்க்கிறது.’

- வீ.பா.கணேசன்

நோ ப்ரசெண்ட்ஸ் ப்ளீஸ் - மும்பை ஸ்டோரீஸ் - ஜயந்த் கைகினி கன்னடத்திலிருந்து ஆங்கிலத்தில்:

தேஜஸ்வினி நிரஞ்சனா.

ஹார்ப்பர் பெரென்னியல் வெளியீடு, ஏ-75, செக்டார் 57, நொய்டா, உத்தரப் பிரதேசம் - 201301. விலை: ரூ. 350

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x