Last Updated : 18 May, 2019 08:36 AM

 

Published : 18 May 2019 08:36 AM
Last Updated : 18 May 2019 08:36 AM

பிறமொழி நூலகம்: மனம் திறக்கும் மக்கள் சேவகர்

இந்திய ஆட்சிப் பணியில் பணிபுரிவோர் எத்தகைய சவால்களைத் தங்கள் பணிக்காலத்தில் எதிர்கொள்ள நேர்கிறது என்பது வெளிச்சத்துக்கு வராத விஷயம்தான். கடுமையான போட்டிக்கிடையே பதவியைப் பெற்றதும்தான் உண்மையான ஓட்டத்தை அவர்கள் பணிக்காலம் முழுவதும் மேற்கொள்ள நேர்கிறது என்பதைச் சுவைபட எழுதியிருக்கிறார் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அனில் ஸ்வரூப். தொழிலாளர்நலத் துறையில் பணிபுரிந்த காலத்தில் எதிர்ப்புகளுக்கு இடையிலும் இந்தியாவில் முதல் முறையாகப் புலம்பெயர் தொழிலாளர்களின் மருத்துவ வசதிக்கான ஸ்மார்ட் கார்ட் முறையை அறிமுகப்படுத்தியவர் இவர். நிலக்கரி சுரங்கங்களின் ஏல முறையை மிக வெளிப்படையான வகையில் நிகழ்த்திக் காட்டியவரும்கூட. இவரது பல்வேறு போராட்டங்களைச் சுவைபட எடுத்துக்கூறுகிறது. அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் இது.

நாட் ஜஸ்ட் அ சிவில் சர்வெண்ட்

அனில் ஸ்வரூப்

யுனிகார்ன் புக்ஸ், புதுடெல்லி-110002.

விலை: ரூ.499

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x