Last Updated : 04 May, 2019 08:07 AM

 

Published : 04 May 2019 08:07 AM
Last Updated : 04 May 2019 08:07 AM

பிறமொழி நூலகம்: துறவியாய்… போராளியாய்…

விவேகானந்தரால் நிவேதிதா என்று பெயர் சூட்டப்பட்ட அயர்லாந்து பெண்மணியான மார்கரெட் எலிசபெத் நோபிள், இந்தியாவில் மேற்கொண்ட சேவைகள் அநேகம். அதில் முதன்மையானது பெண் கல்வி. பிரிட்டிஷ் ஆதிக்க எதிர்ப்பைப் பரம்பரையாகத் தன்னுள் வரித்திருந்த சகோதரி நிவேதிதா, இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பங்காற்றினார். ஜனவரி 28, 1898 கல்கத்தா துறைமுகத்தில் மார்கரெட் ஆக வந்திறங்கியவரின் வாழ்க்கை 1911-ல் இந்திய மண்ணிலேயே நிறைவடைந்தது. இந்த மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே மிகச் செறிவான போராட்டங்களை அவர் முன்னெடுத்தார். இந்த வாழ்க்கை வரலாற்று நூல் அவரது 150-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களையொட்டி வெளியாகியுள்ளது. இந்நூல் இந்திய வரலாற்றை நாம் தெரிந்துகொள்வதற்கான பாடங்களில் ஒன்றாகவும் அமைகிறது.

தி டெடிகேட்டட்: எ பயாக்ராஃபி ஆஃப் நிவேதிதா

லிஸெல் ரெய்மண்ட்

பீ புக்ஸ்

தார்யாகஞ்ச், புதுடெல்லி-110002.

விலை: ரூ.350

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x