

தலைமைப் பதிப்பாசிரியர்கள்: சிற்பி பாலசுப்பிரமணியம், நீல பத்மநாபன்
மூன்று தொகுதிகளும் சேர்த்து ரூ. 1,800
தமிழில் இலக்கிய வரலாற்று நூல்களுக்கு எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை. ஆனாலும், மூன்று தொகுதிகளாக விரிவாக வந்திருக்கும் இந்தப் புத்தகம், விசேஷமானதாக இருக்கிறது. தொல்காப்பியத்தில் இருந்து முத்தொள்ளாயிரம் வரை அணுகும் முதல் தொகுதி தொன்மைக் கால இலக்கிய வரலாற்றைச் சொல்கிறது. பக்தி இலக்கியங்களில் தொடங்கி தனிப்பாடல் திரட்டுகள் வரையிலான இலக்கிய வரலாற்றை இரண்டாம் தொகுதி சொல்கிறது. புத்திலக்கியத்தில் தொடங்கி புலம்பெயர்ந்தோர் இலக்கியம் வரையிலான வரலாற்றை மூன்றாம் தொகுதி சொல்கிறது. பொதுவாக, இப்படிப்பட்ட இலக்கிய வரலாற்று நூல்கள் ஒரே ஆசிரியரால் எழுதப்பட்டவையாக இருக்கும்; விதிவிலக்காக இந்நூலின் ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வோர் ஆசிரியரால் எழுதப்பட்டு, பதிப்பாசிரியர் குழுவால் தொகுக்கப்பட்டிருக்கிறது. நல்ல தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ரூ.1,800 மதிப்புள்ள இந்நூலை ‘சாகித்ய அகாடெமி’ ரூ.1,200 சிறப்பு விலையில் புத்தகக் காட்சியில் தருகிறது.