Last Updated : 25 Apr, 2019 08:49 AM

 

Published : 25 Apr 2019 08:49 AM
Last Updated : 25 Apr 2019 08:49 AM

தாளமாலிகையில் துறுதுறு தெனாலிராமன்!

எல்லாக் காலத்திலும் குழந் தைகளுக்கு நெருக்கமான நாயகனாக தன்னுடைய அறிவார்ந்த நகைச்சுவையால் அறியப்படுபவர் `விகடகவி’ தெனாலிராமன்.

காளியின் அருளைப் பெற் றதுமுதல் கிருஷ்ண தேவராயரின் அவையில் விகடகவியாக தெனாலி இடம்பெற்று செய்த அரிய செயல்களை, `துறுதுறு தெனாலிராமன்’ எனும் நாட் டிய நாடகமாக சமீபத்தில் வாணிமகாலில் வழங்கினர் `பரதம் அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்’ஸின் மாணவிகள்.

ஹிமஜா பாலசுப்ரமணியன் ஏறக்குறைய 16 மாணவிகளுக்கு உரிய நாட்டியப் பயிற்சி களை வழங்கியதுடன், அவரே கிருஷ்ணதேவராயராகவும் மேடையில் சிறப்பான பங்க ளிப்பை வழங்கினார். தெனாலி ராமன் பாத்திரத்தில் தோன்றிய சிறுமி ரமாவின் குறும்பு மின்னும் கண்களும் உடல்மொழியும், அவர் ஏற்றிருந்த பாத்திரத் துக்கு மிகவும் பொருத்தமாக இருந்தன.

அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர் ணம், பதம், ஜாவளி, தில்லானா போன்ற வழக்கமான பரதநாட் டிய முறையில் இல்லாமல், இந்த நகைச்சுவை நடன நிகழ்ச்சியை வடிவமைத்திருந்ததுதான் சிறப்பு. நாட்டியத்துக்கு இசை பெரிதும் முக்கியத்துவம் வாய்ந் தது. முழுக்க முழுக்க இசையை மட்டுமே பிரதானப்படுத்தி நடந்த இந்த நிகழ்ச்சி, சுவாரஸ்யமானது மட்டுமல்ல; மிகவும் அரிதான ஒன்று. பாடல்களே இல்லாமல் இசையே முழு நிகழ்ச்சியையும் வழிநடத்தியது. காட்சிகளின் தன்மையை மட்டும் கதை சொல்லியாக ஒருவர் விளக்க, பாத்திரங்களின் உடல்மொழி, பாவனைகளின் வழியாகவே காட்சியின் நகைச்சுவை மிகச் சரியாக ரசிகர்களை சென்றடைந்தது.

கர்னாடக இசை, இந்துஸ் தானி, மேற்கத்திய இசை போன்ற பல பாணிகளையும் சேர்த்து, ராக மாலிகை, தாளமாலிகையாக அற்புதமான பல இசைக் கோவைகளை இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தியிருந்தார் புல்லாங் குழல் வித்வான் அதுல்குமார். வழக்கமான வயலின், மிருதங் கம், கஞ்சிரா, கொன்னக்கோல், சிதார் ஆகியவற்றுடன் கிடார், டிரம்ஸ், சென்டை, ஜம்பை, தர்புகா போன்ற வாத்திய ஒலிகளும் காதுகளுக்கு புதிய அனுபவத்தைத் தந்தன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x