பொருளாதார நெருக்கடியின் அச்சுறுத்தல்

பொருளாதார நெருக்கடியின் அச்சுறுத்தல்
Updated on
1 min read

உலகின் பல்வேறு நாடுகளின் வாழ்க்கைச் சூழலைப் புதிய பொருளாதாரக் கொள்கைகள் மாற்றியமைத்தன. அதைத் தொடர்ந்து உருவான பொருளாதார நெருக்கடியில் சாமானியர்கள் கடுமையான சிரமத்துக்கு உள்ளாகினர். 2008-ல் தொடங்கிய பொருளாதார நெருக்கடி உலகின் வளரும் நாடுகள் மீது, குறிப்பாக இந்தியா மீது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற பெயரில் இந்திய வளங்களையெல்லாம் தனியார்மயமாக்க இங்கே முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளெல்லாம் இப்போது இந்தியாவின் தோற்றத்தையே மாற்றி அமைத்துள்ளன. குழந்தைநல மருத்துவ நிபுணரும், அனைவருக்குமான மருத்துவ உரிமைக்கான செயல்பாட்டாளருமான டாக்டர் ரெக்ஸ் சற்குணம் எழுதியுள்ள இந்நூல், இந்தியச் சூழலில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடிகளையும், சாமானியர்கள் மத்தியில் உறைந்திருக்கும் அச்சுறுத்தல்களையும் பட்டியலிடுகிறது.

- வீ.பா.கணேசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in