Last Updated : 16 Mar, 2019 10:08 AM

 

Published : 16 Mar 2019 10:08 AM
Last Updated : 16 Mar 2019 10:08 AM

பிறமொழி நூலகம்: உளவுத் துறையும் ஜனநாயகமும்

பாகிஸ்தான் ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதியான ராபர்ட் காதோர்னால் 1947-48ல்உருவாக்கப்பட்டது ஐஎஸ்ஐ. ராணுவப் படைப்பிரிவுகளுக்கு இடையேயான இந்த நுண்ணறிவு அமைப்பு ஆஃப்கன் மீதான சோவியத் படையெடுப்புக் காலத்தில், அமெரிக்காவின் நுண்ணறிவு அமைப்பான சிஐஏவின் பராமரிப்பில் வளர்த்தெடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் ராணுவ, அரசியல் தலைமைகளை ஆட்டிப் படைக்கும் ஒரு சக்தியாக ஐஎஸ்ஐ தன்னை வளர்த்துக்கொண்டது என்பதன் வரலாறு இந்த நூல். பாகிஸ்தானில்

வசித்த ஜெர்மானியரான ஹெய்ன் ஜி. கீஸ்லிங் எழுதியிருக்கிறார். பாகிஸ்தானில் முஹாஜிர்கள், தலிபான்கள் ஆகிய தீவிரவாதக் குழுக்களை ஐஎஸ்ஐ எப்படி வளர்த்தெடுத்தது என்பதையும் அந்நாட்டில் ஜனநாயகம் வேரூன்றாத நிலைக்கு எப்படியெல்லாம் காரணமாக இருந்திருக்கிறது என்பதையும் விளக்கும் நூல்.

ஃபெய்த், யூனிட்டி, டிசிப்ளின்:

த ஐஎஸ்ஐ ஆஃப் பாகிஸ்தான்

ஹெய்ன் ஜி. கீஸ்லிங்

ஹார்ப்பர் காலின்ஸ் பப்ளிஷர்ஸ் இந்தியா

விலை: ரூ. 599

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x