

ஒவ்வொரு யாசகரின் வாழ்வும் எதிர்பாராத திருப்பத்தில் திசைமாறி, குடும்பம் விட்டு விலகி, தனிமையில் ஒண்டி, கடைசியில் எல்லோரும் ஒரே முகத்துக்கு மாறிவிடுகிறார்கள் என்று சொல்லும் எழுத்தாளர் தீன், பாளையங்கோட்டை, திருநெல்வேலி சுற்றுப்புறத்தில் உள்ள யாசகர்களின் வாழ்வை இந்நாவலில் நுட்பமாகப் பதிவுசெய்திருக்கிறார். யாசகர்கள் உணவுக்காகப் பல தூரம் நடக்கிறார்கள். எல்லா நாட்களிலும் சாப்பாட்டுக்கு உத்தரவாதம் இல்லை. பல நாட்கள் கொலைப்பட்டினியாகவும் இருக்க நேரிடுகிறது. யாரோ ஒருவர் தனக்கான உணவுப் பொட்டணத்தைக் கொண்டுவந்து தருவார்கள் என்ற நம்பிக்கையைச் சுமந்து வாழ்கிறார்கள்.
யாசகம்
எம்.எம்.தீன்
ஜீவா படைப்பகம்
நக்கீரர் தெரு, காஞ்சிபுரம்-603209.
விலை: ரூ.200
9994220250