Published : 30 Mar 2019 08:58 am

Updated : 30 Mar 2019 08:59 am

 

Published : 30 Mar 2019 08:58 AM
Last Updated : 30 Mar 2019 08:59 AM

நூல் நோக்கு: குரலற்றவர்களின் பெருங்குரலாய்!

திருக்கார்த்தியல்

ராம் தங்கம்


வம்சி புக்ஸ்

திருவண்ணாமலை- 606601

விலை: ரூ.170

9445870995

என் தலைமுறையின் பலரும் கடந்துவந்த பாதைதான் ‘திருக்கார்த்தியல்’ செந்தமிழுக்கானதும். கேவும் ஆன்மாவைத் தவிர்த்துக் கடக்க முடியவில்லை. பொருளாதார, அரசியல் அரங்குகளில் பலமாய் வியாபித்திருக்கும் சமூகங்களின் அக வேர்களில் நடத்திய விசாரணையே இ்த்தொகுப்பிலுள்ள கதைகள். சமூக அவலங்களை அதன் அக, புறக் கூறுபாடுகளோடுடனான உணர்வுகளாய்க் கொட்டுகிறது. ராம், அடிப்படையில் ஆய்வாளராய் இருப்பதால் அடித்தள மக்களின் வாழ்வு அதன் ஆணிவேரான தொன்மங்களோடு கதைகளில் தெறிக்கிறது.

- ஜோ டி குருஸ்

சந்தக் கவிதைகள்

உறவே உதவும்

ரவணசமுத்திரம் நல்லபெருமாள்

ஸ்ரீசெண்பகா பதிப்பகம்

தி.நகர், சென்னை-17

விலை: ரூ.150

044 24331510

பள்ளி ஆசிரியராகவும் கல்வித் துறை பயிற்சியாளராகவும் பல்வேறுபட்ட அனுபவங்களுக்குச் சொந்தக்காரர் நல்லபெருமாள். 80 வயதில் தனது கவிதை முயற்சிகளுக்கு நூல்வடிவம் கொடுத்திருக்கிறார். விநாயகர், முருகன், கண்ணன் துதிப் பாடல்கள்; வாழ்வின் நிலையாமையைப் பேசும் தத்துவப் பாடல்கள்; தமிழையும் தமிழ்க் கவிஞர்களையும் போற்றும் கவிதைகள்; குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அனுபவப் பதிவுகள், பள்ளிக் குழந்தைகளுக்குப் பயன்படும் சந்தப் பாடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுப்பு இது. பல பாடல்கள் மரபுக் கவிதைகளை வாசிக்கும் அனுபவத்தை அளிக்கின்றன.

- ராசய்யா

ஒரு போராளியின் பார்வை

எங்கள இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க!

ஜி.செல்வா

வாசகசாலை வெளியீடு

சென்னை-73.

விலை: ரூ.130

99426 33833

விவசாயத்தைக் கைவிட்டு, கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களின் உழைப்பால் உருப்பெற்ற பெருநகரம் சென்னை. இயற்கைப் பேரிடர்களைச் சந்திப்பதற்குத் தயார்நிலையில் இல்லாத அரசு, ஆற்றங்கரைக் குடிசைகளை அகற்றி நகருக்கு வெளியே அவர்களை அப்புறப்படுத்திவிட்டது. ஆனால், சென்னைக்குள் ஓடும் ஆறுகளின் கரையோரங்களையும் சதுப்புநிலங்களையும் ஆக்கிரமிக்கும் பெருநிறுவனங்கள் சட்டபூர்வமான அனுமதியோடு இயங்கிவருகின்றன. குடிசைப்பகுதிகளை அகற்றுவதை எதிர்த்துப் போராட்டக்களத்தில் நிற்கும் ஜி.செல்வா, நகர்மயமாதலில் குடிசைவாசிகளின் பங்களிப்பை ஆதாரங்களோடு முன்வைத்து ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தை அரசு அணுகிய விதம், பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடிகளுடனான பயண அனுபவங்கள் என்று கடந்த இரண்டாண்டுகளில் அவர் எழுதிய முக்கியமான கட்டுரைகளின் தொகுப்பு இது.

-புவிSign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x