Published : 09 Feb 2019 09:04 AM
Last Updated : 09 Feb 2019 09:04 AM

நல்வரவு: காந்தியடிகளும் குழந்தைகளும்

வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்!

காம்கேர் புவனேஸ்வரி

தாமரை பப்ளிகேஷன்ஸ்

சென்னை-98

விலை: ரூ.100

 044 26251968

இந்து தமிழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் ‘வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்’ என்ற தலைப்பில் வெளியான தொடர்க் கட்டுரைகளின் தொகுப்பு. ஆன்லைன் வணிகம் பற்றிய அறிமுகம், ஆலோசனைகள் மற்றும் எச்சரிக்கைகள்.

இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்

செ.திவான்

இலக்கியச்சோலை

சென்னை-3

விலை: ரூ.90

 9962918724

காந்தியால் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளி கிலாபத் இயக்கம். அந்த இயக்கத்தைத் தொடங்கிய அலி சகோதரர்களின் வரலாறு இது. வரலாற்று ஆய்வாளர் செ.திவானின் 120-வது நூல்.

காலனியத்தின் இன்றைய முகங்கள்

முரளி சண்முகவேலன்

மின்னம்பலம் பதிப்பகம்

விலை: ரூ.110

லண்டன் தொடங்கி தூத்துக்குடி வரைக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்துவரும் ஆளும் வர்க்க அடக்குமுறைகளைப் பல்வேறு கோணங்களில் அலசும் கட்டுரைகள். பாதிக்கப்படும் சாமானிய மக்களின் நியாயங்கள் அழுத்தத்தோடு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

முகங்கள்

சத்யா ஜி.பி.

வாதினி பதிப்பகம்

சென்னை- 78

விலை: ரூ.160

ஏடிஎம் காவல்காரர், நள்ளிரவு டீக்கடைக்காரர், பால் பாய் என்று தினசரி வாழ்வில் சந்திக்கும் எளிய மனிதர்களின் முகமூடியில்லாத முகங்களைப் பற்றிய நினைவுகள். 29 கட்டுரைகளும் சிறுகதைகளைப் போல வாசிக்க சுவாரஸ்யமாக அமைந்துள்ளன. 

காந்தியடிகளும் குழந்தைகளும்

ஆர்.கே.பிரபுசேவக் போஜ்ராஜ்

தமிழாக்கம்: அ.இராமசாமி

காந்திய இலக்கியச் சங்கம்

மதுரை- 20

விலை: ரூ.130

 9444058898

காந்தியின் 150-வது ஆண்டுவிழாவையொட்டி மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள குழந்தைகளுக்கான காந்திய நூல்.

காந்தியின் குழந்தைப் பருவம், குழந்தைகளுக்கான அவரது அறிவுரைகள் என்று காந்தியத்தை ஒரு வாழ்வியல் நெறியாக அறிமுகப்படுத்தும் நூல்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சித்த மருத்துவரின் கடிதம்

ஜெயராம் சேவியர்

காவ்யா பதிப்பகம்

சென்னை- 24

விலை: ரூ.260

 044 23726882

சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் இயல், மருத்துவம், உணவு, உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் நூல். நீரிழிவைச் சந்திப்பவர்கள் உணவின் மூலமும் உடற்பயிற்சியின் மூலமும் அதைக் கட்டுக்குள் கொண்டுவர வழிகாட்டும் புத்தகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x