

அல்போன்ஸ் ராய் வனஉயிர் புகைப்படக் கலைஞர்
பள்ளிக்கூட நாட்களிலேயே பாடப் புத்தகங்களைத் தாண்டி வாசிக்கும் பழக்கம் வந்துவிட்டது. ஒருகட்டத்தில், என்னுடைய வனஉயிர் புகைப்படக் கலை சார்ந்த புத்தகங்கள் அப்படியே வாரிக்கொண்டன. வனஉயிர் புகைப்படக் கலைஞரான ஆன்சல் ஆடம்ஸ்சின் புத்தகங்களை என் துறையின் பைபிள் என்று சொல்வேன். வாழ்க்கைக்குப் பெரிய உத்வேகம் அளித்தது என்றால், சுவாமி விவேகானந்தரின் எழுத்துகள். அவரது ‘எழுமின், விழுமின், உழைமின்’ வார்த்தைகள் நினைவுக்கு வரும்போது, இன்னமும்கூடப் புது உத்வேகத்தை உணர்கிறேன். எனது குழந்தைகளுடன் இன்றைக்கு அடிக்கடிப் பேசும் வார்த்தைகள் இவை.
எப்போதும் உடன் வரும் துணைவன் ‘நேஷனல் ஜியாக்ரபி’ இதழ். இப்போது தேவ் தத் பட்நாயக் என்னை விரட்டிக்கொண்டிருக்கிறார். ஆமாம், அவருடைய ‘ஜய- அன் இல்லஸ்ட்ரேட்டட் ரீடெல்லிங் ஆஃப் த மஹாபாரதா’ அவ்வளவு சுவாரசியமாக என்னுடைய நேரத்தை அபகரித்துக்கொண்டிருக்கிறது!