Last Updated : 02 Feb, 2019 09:36 AM

 

Published : 02 Feb 2019 09:36 AM
Last Updated : 02 Feb 2019 09:36 AM

நூல் நோக்கு: மண்ணும் மனிதர்களும்

பாரதியின் எட்டயபுரம் அருகிலுள்ள வெம்பூர் எனும் கிராமத்தின் நிலம், கலாச்சாரம், பண்பாடு, மனிதர்கள் என ஒரு காலகட்டத்தின் வாழ்க்கை முறை குறித்துத் தனது பால்யகால அனுபவங்களை விரிவாகப் பேசுகிறார் கவிஞர் சமயவேல். பல்வேறு சாதியக் கட்டுமானங்களோடு கட்டமைக்கப்பட்டிருக்கும் கிராமத்தின் வாழ்வியல், பண்பாட்டுக்கூறுகள் குறித்துப் பேசும் இக்கட்டுரைகள், நேர்மறையான தாக்கத்தையே வாசகருக்குத் தருகின்றன. வெம்பூர்வாசிகள் சாதிவாரியான குடியிருப்புகளோடு பிரிக்கப்பட்டிருந்தாலும் பகையுணர்வின்றி இணக்கமாக வாழ்க்கை நடத்துகிறார்கள். சமயவேல், நம் காலத்து நியாயங்களைக் கடந்த காலத்தில் தேட முயலவில்லை. அட்டை, பக்கங்கள் வடிவமைத்த மாரீஸுக்கு ஒரு சிறப்பு வாழ்த்தையும் சொல்ல வேண்டும்.

புனைவும் நினைவும்

சமயவேல்

மணல்வீடு பதிப்பகம்

ஏர்வாடி, சேலம்-636453

தொடர்புக்கு: 9894605371

விலை: ரூ.100

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x