சொந்தச் சிறகுகளால்...

சொந்தச் சிறகுகளால்...
Updated on
1 min read

தன்னடக்கம், எளிமை, பரிவு ஆகியவை ஆன்மிகத்துக்கான அடையாளங்கள், அல்லல்களுக்கு இடையே ஆள் தொலைந்து போகாமல் இருப்பதே வாழ்வதாகும் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர் ரமணன். புல்லினும் அற்பமானது கவலை என்கிற அவர், கவலையைச் சரவெடி போல உருவகிக்கிறார். ஒரே ஒரு திரி, நூறு வெடிகள் என விளக்கவும் செய்கிறார். ஒருபோதும் நம்மை நாமே கைவிடலாகாது என்று உற்சாகமும் ஊட்டுகிறார் அவர்.

சாதாரண மனிதர்களை ஆன்மிகத்தை நோக்கி அடியெடுத்து வைக்கச் செய்யும் முயற்சியாக இந்த நூல் இருக்கிறது. எங்கே மதம் முடிகிறதோ அங்கே ஆன்மிகம் தொடங்குகிறது என்கிறார் நூலாசிரியர். சொந்தச் சிறகுகளால் பறக்கும்போது வானம் உயரமில்லை என்பது இந்த நூலின் மையம்.

நம்மையும் வாழ்வையும் சரியாக காணக்கூடிய பார்வையே உற்ற தோழன். அதுவே ஞானம். கடவுளின் நிழல். அதிலொரு துளியே இந்த நூல் என்கிறார் நூலாசிரியர் அருணன். ஆங்கிலத்தில் தான் எழுதிய நூலைத் தானே தமிழாக்கி நமக்கு அளித்துள்ளார் ரமணன்.

இது வாழ்பனுபவ வழிகாட்டி மட்டுமல்ல, சுயமுன்னேற்ற அம்சங் களைக் கொண்ட ஆன்மிக நூல். சக மனிதர்களின் நலத்தில் செயல்பூர்வமான அக்கறை, தன்னலம் கருதாத பண்பாடு இவையே வாழ்தல் என்பதாகும் என்று வரையறை செய்கிறது இந்த நூல்.

எந்த வானமும் உயரமில்லை

ஆசிரியர் ரமணன்,
ரீம் பப்ளிகேஷன் பிரைவேட் லிமிடெட்,
4787 / 23,அன்சாரி சாலை, தார்யகஞ்ச், புதுடெல்லி,110002
தொடர்புக்கு- 011-23262905, மின்னஞ்சல்: reem.publications@vsnl.net
விலை: ரூ 25

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in