Last Updated : 09 Feb, 2019 08:57 AM

 

Published : 09 Feb 2019 08:57 AM
Last Updated : 09 Feb 2019 08:57 AM

பிறமொழி நூலகம்: நாங்கள் பூங்கொடிகளல்ல!

உலக வரலாற்றில் என்றும் அழியாத கருப்புப் பக்கங்களுள் ஒன்று இரண்டாம் உலகப் போர். முதல் உலகப் போரின் இறுதியில் உதித்தெழுந்த தம் தாய்நாட்டை நாஜிகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றப் போராடிய சோவியத் யூனியன் இப்போரில் கோடிக்கணக்கானோரைப் பலியிட்டது. “மாபெரும் தேசபக்தப் போர்” என அழைக்கப்பட்ட இந்தப் போரில் சிறுமிகள், இளம் பெண்கள், கர்ப்பிணிகள், முதுவயதுப் பெண்கள் எனப் பல்வேறு தரப்புப் பெண்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட புதுமை நிகழ்ந்தேறியது. இது சோவியத் சமூகத்தில் ஆழமான தாக்கத்தை உருவாக்கி பெண்களின் மேன்மைக்கும் வழிவகுத்தது. இத்தகு வீரப் பெண்களின் அனுபவங்களை அவர்களின் வாய்மொழியாகவே வரலாறாகப் பதிவுசெய்திருக்கிறார் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற ஸ்வெட்லானா அலெக்சியேவிச்.

தி அன்வுமன்லி ஃபேஸ் ஆஃப் வார்

ஸ்வெட்லானா அலெக்சியேவிச்

பெங்க்வின் க்ளாசிக்ஸ்

விலை: ரூ.499

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x