Published : 02 Feb 2019 09:57 AM
Last Updated : 02 Feb 2019 09:57 AM

நல்வரவு

குறிஞ்சித் தேன்

ராஜம் கிருஷ்ணன்

ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

தி.நகர், சென்னை - 17

விலை: ரூ.325

 044-24331510

படகர் வாழ்க்கையை நுட்பமாகப் பேசும் ராஜம் கிருஷ்ணனின் ‘குறிஞ்சித் தேன்’ நாவல் ஏற்கெனவே பரவலான வாசக கவனம் பெற்றது. இந்நூலின் புதிய பதிப்பு இது.

போரும் அமைதியும்

செ.கணேசலிங்கன்

குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை-26

விலை: ரூ.70

 9444808941

யுத்த நெருக்கடி காலத்தில் கொழும்பு மாநகரில் அச்சக வேலை தேடிச் செல்லும் சுப்பரமணி, திடீரெனக் காணாமல்போகிறான். இந்தப் பிண்ணனியில் விரிகிறது நாவல்.

நங்கூர நாச்சியார்கள்

எஸ்.பாலராஜேஸ்வரி

 நாச்சியார்

காவ்யா பதிப்பகம்

கோடம்பாக்கம், சென்னை-24.

விலை: ரூ.300

 9840480232

இலக்கியவாதியோ, சரித்திர ஆராய்ச்சியாளரோ அல்லாத ஒரு பாட்டி தனது பேரக் குழந்தைகளுக்காக எழுதிய மாதரசிகளின் வரலாற்றுச் செய்திகளே இந்தப் புத்தகம்.

இந்திய ரயில் போக்குவரத்தின் சுவையான வரலாறு

பொ.முத்துக்குமரன், ம.சாலமன் பெர்னாட்ஷா

என்சிபிஹெச் வெளியீடு

அம்பத்தூர், சென்னை-98.

விலை: ரூ.250

 044 – 26251968

இந்திய ரயில் போக்குவரத்தின் வளர்ச்சியை விரிவாகப் பேசுகிறது இந்நூல். கூடவே, ரயில் போக்குவரத்தைப் பொதுமக்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் பதிவுசெய்திருக்கிறது.

நாலடியார்

நீலம்.மதுமயன்

பாபா வெளியீடு

மேற்கு மாம்பலம்,

சென்னை-33.

விலை: ரூ.165

 99523 35505

பல்வேறு சமணப் புலவர்களால் எழுதப்பட்ட நாலடியாருக்கு தெளிவுரை எழுதியிருக்கிறார் நீலம்.மதுமயன். திருக்குறளையும் இந்நூலுக்கு நெருக்கமாகக் கொண்டுவர முயன்றிருக்கிறார்.

திங்க் அண்ட் வின்

லைக் தோனி

ஸ்ஃபர்தி சஹாரே

ஜெய்கோ வெளியீடு

மேற்கு மாம்பலம்,

சென்னை-600033. விலை: ரூ.150

 044-2480 3091

எதிர்மறையான சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பதை கிரிக்கெட் நாயகன் தோனியின் அணுகுமுறைப்படி இந்நூலில் விளக்குகிறார் ஸ்ஃபர்தி சஹாரே. இளம் வயது முதல் இப்போது வரையிலான தோனியின் பயணத்தைப் பேசுகிறது இந்நூல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x