Published : 18 Jan 2019 08:57 AM
Last Updated : 18 Jan 2019 08:57 AM

சிறார்களைக் கட்டிப்போடும் பெண் எழுத்தாளர்கள்

பெண் எழுத்தாளர் ஜொகன்னா ஸ்பைரி எழுதிய உலகப் புகழ்பெற்ற சிறார் நாவலான ஹெய்தி (Heidi) நாவலை, எழுத்தாளர் சுகு மாரன் மொழிபெயர்ப்பில் வானம் பதிப் பகம் வெளியிட்டுள்ளது. இந்த நாவலு டன் பெண் எழுத்தாளர்கள் ஃபிரான்சிஸ் ஹட்சன் பர்னட்டின் ‘ரகசியத் தோட்டம்’ (The Secret Garden), எல்.எம்.மாண்ட் கோமரியின் ‘கிரீன் கேபிள்ஸ் ஆனி’ (Anne of Green Gables) ஆகிய சிறார் நாவல்களையும் புத்தகக்காட்சி சிறப்பு வெளியீடாகக் கொண்டுவந்துள்ளது. மூன்று நாவல்களுமே பெண் எழுத்தா ளர்கள் எழுதியவை என்ற சிறப்பம்சம் ஒரு பக்கம் இருக்க, பார்த்தவுடன் வாங்கத் தூண்டும் வகையில் மூன்று நூல்களும் வடிவமைக்கப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பு. நூற்றாண்டுகளைத் தாண்டியும் இந்தப் பெண் எழுத்தாளர்கள் சிறார் களைக் கட்டிப்போடவே செய்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x