Published : 16 Jan 2014 11:41 AM
Last Updated : 16 Jan 2014 11:41 AM

அவசியம் செல்லுங்கள் அகாடமி அரங்குக்கு!

சென்னைப் புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்கள் கவனிக்க வேண்டிய அரங்குகளில் முக்கியமானது ‘சாகித்ய அகாடமி’அரங்கு. மத்திய அரசின் நிறுவனமான ‘சாகித்ய அகாடமி’யின் பதிப்பகம் வெளியிடும் புத்தகங்களின் மிக முக்கியமான சிறப்பம்சம் அவற்றின் குறைவான விலை. 101 மொழிபெயர்ப்புகள், 85 நாவல்கள், 54 சிறுகதைகள், 21 நாடகங்கள், 28 கவிதைகள், 9 இலக்கிய நூல்கள்,

7 இலக்கிய வரலாறுகள் என்று விரியும் ‘சாகித்ய அகாடெமி’யின் கவனிக்க வேண்டிய தொகுதி இந்திய இலக்கியச் சிற்பிகள். இந்தத் தலைப்பில் கிட்டத்தட்ட 85 நூல்களை அது வெளியிட்டிருக்கிறது. மாணவர்களுக்கும், இலக்கியம் தெரிந்துகொள்ள விரும்பும் ஆரம்ப கால வாசகர்களுக்கும் நல்ல அறிமுகத்தைத் தரும் இந்த நூல்களின் பழைய பதிப்புகள் ரூ. 25 விலையிலும், புதிய பதிப்புகள் ரூ. 50 விலையிலும் கிடைக்கின்றன. தவிர, பெரும்பாலான புத்தகங்கள் குறைந்தபட்சம் 50% முதல் அதிகபட்சம் 80% வரையிலான சிறப்பு விலையில் கிடைப்பது இன்னொரு சிறப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x