Published : 22 Jan 2019 08:52 AM
Last Updated : 22 Jan 2019 08:52 AM

அதிகம் விற்ற 10 புத்தகங்கள்

சஞ்சாரம்

எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி.

மார்க்சியம் இன்றும் என்றும்

விடியல் வெளியீடு.

தொ.பரமசிவன் புத்தகங்கள்

காலச்சுவடு வெளியீடு.

மூளைக்குள் சுற்றுலா

வெ.இறையன்பு, என்சிபிஹெச் வெளியீடு.

வால்காவிலிருந்து கங்கை வரை

ராகுல் சாங்கிருத்தியாயன், பாரதி புத்தகாலயம்.

அக்னி நதி

குல் அதுல்ஜன் ஹைதர், என்பிடி வெளியீடு.

கசார்களின் அகராதி

மிலோராத் பாவிச், எதிர் வெளியீடு.

பெத்தவன்

இமையம், க்ரியா வெளியீடு.

சிலைத் திருடன்

எஸ்.விஜய் குமார், கிழக்கு வெளியீடு.

கங்காபுரம்

அ.வெண்ணிலா, அகநி வெளியீடு.

புத்தக வெளியீட்டுக்காக 3,000 கி.மீ. பயணம்!

பெண்கள் முன்னேற்றத்துக்காகத் தனது ஐடி வேலையைத் துறந்துவிட்டு, ஒரு சமூக சேவகராகத் தன்னை உருமாற்றிக்கொண்ட எழுத்தாளர் நசீமா ரசாக், தனது புத்தக வெளியீட்டுக்காக துபாயிலிருந்து சென்னைக்கு ஒரு நாள் பயணமாக வந்திருந்தார். அமீரகத்தில் கடந்த 9 வருடங்களாகப் பெண்களுக்கான சுயமுன்னேற்ற வகுப்புகளை நடத்திவரும் இவர், தனது அனுபவங்களை ‘என்னைத் தேடி’ எனும் நாவலாக எழுதி வெளியிட்டிருக்கிறார். “எனது எழுத்தையும் வாழ்க்கையையும் சமூகத்துக்காக அர்ப்பணிப்பதென்பது எனது வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது” என்கிறார் நசீமா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x