Published : 14 Jan 2019 09:32 AM
Last Updated : 14 Jan 2019 09:32 AM

கவனிக்க வேண்டிய 5 நூல்கள்

ராஜேஷ் குமார் சிறந்த சிறுகதைகள்

உயிர்மை

கருஞ்சட்டைப் பெண்கள்

ஓவியா

கருஞ்சட்டைப் பதிப்பகம்

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

வே.மு.பொதியவெற்பன்

அன்னம் வெளியீடு

சிலைத் திருடன்

எஸ்.விஜய் குமார் 

தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

கிழக்கு பதிப்பகம்

சுளுந்தி

இரா.முத்துநாகு

ஆதி பதிப்பகம்

பளிச்

செம்மொழிச் சிற்பிகள்

பரிதி இளம்வழுதி

ஆப்ரா மீடியா நெட்வொர்க்ஸ்

விலை: ரூ.1,200

பரிதி இளம்வழுதியின் இன்னொரு பக்கத்தைக் காட்டும் நூல் இது. பரிதிமாற் கலைஞர், பாரதி, மனோன்மணீயம் சுந்தரனார், மறைமலை அடிகள் தொடங்கி ச.வே.சுப்பிரமணியம், மணவை முஸ்தபா வரை நீளும் இந்நூல் தமிழ் ஆளுமைகளை அறிமுகப்படுத்துகிறது. இந்தப் பட்டியலில் கருணாநிதியின் பெயர் முதல் பக்கத்தில் இருப்பதுதான் முகத்தில் அடிப்பதுபோல இருக்கிறது. பரிதியின் எண்ணங்களுக்கு எழுத்துவடிவம் தந்திருக்கிறார் அஜயன் பாலா. நல்ல அறிமுகம்!

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

திராவிடம் தமிழ்த் தேசியம் கதையாடல்

தமிழவன்

அடையாளம் வெளியீடு

விலை: ரூ.180

நவீன வரலாற்றில் தமிழ் அரசியல் கடந்துவந்திருக்கும் பாதையை விவரிக்கும் இந்த நூல், இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஒன்றோடு ஒன்று கலந்தும் முரண்பட்டும் ஊடாடிய சிந்தனைகளை இன்றைய பார்வையிலிருந்து அர்த்தப்படுத்துகிறது. அண்ணா எவ்வளவு பெரிய ஆளுமை என்பதையும், பாரதிதாசனுக்குத் தமிழ்க் கவிதையில் உள்ள உயரிய இடத்தையும் சுட்டுகிறது. தமிழ்த் தேசியம் பொருண்மையில் மிகவும் முக்கியமான நூல்!

என்னைச் செதுக்கிய 3 நூல்கள்- லிங்குசாமி, இயக்குநர்

வாங்க சினிமா பற்றி பேசலாம்

கே.பாக்யராஜ்

கோபல்லபுரத்து மக்கள்

கி.ராஜநாராயணன்

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

சுஜாதா

நச்

சிட்டுக்குருவி, தேனீ, கருநாகம், பங்குனி ஆமை, குறிஞ்சி மலர், செந்நாய், கரடி, ஆசிய யானை, சிறுத்தை, சோலை மந்தி, புலி, வரையாடு என அருகிவரும் தமிழக உயிரினங்களைப் பற்றிய குறிப்பு களோடு சென்னை புத்தகக்காட்சியின் சிறப்பு வெளியீடாக நாட்காட்டியை வெளியிட்டிருக்கிறார்கள் ‘பூவுலகின் நண்பர்கள்’. ஒயாசிஸ் புக்ஸ் (290) அரங்கில் ரூ.500-க்குப் புத்தகங்கள் வாங்கும் வாசகர்களுக்கு இந்நாட்காட்டியை விலையில்லாமல் வழங்குகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x