Published : 08 Jan 2019 09:29 AM
Last Updated : 08 Jan 2019 09:29 AM

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

1) பெண்ணும் ஆணும் ஒண்ணு

ஓவியா - நிகர்மொழி வெளியீடு

உன் கழுத்தைச்

2) சுற்றிக்கொண்டு இருப்பது

சிமாமண்டா என்கோஜி அடிச்சீ

தமிழில்: வடகரை ரவிச்சந்திரன் 

- பாரதி புத்தகாலயம் வெளியீடு

3) நோய் அரங்கம்

கு.கணேசன் - சூரியன் வெளியீடு

4) எஞ்சின்கள்

ஹாலாஸ்யன் - யாவரும் வெளியீடு

5) ழ என்ற பாதையில் நடப்பவன்

பெரு.விஷ்ணுகுமார்

- மணல்வீடு வெளியீடு

ஆஹா

மார்க்சியம் இன்றும் என்றும்

விடியல் பதிப்பகம்

விலை: ரூ.500

பெரியார், அம்பேத்கர் நூல்கள் வரிசையில் இந்தப் புத்தகக்காட்சியைக் கலக்க விடியல் பதிப்பகம் கொடுத்திருக்கும் நூல் வரிசை ‘மார்க்சியம் இன்றும் என்றும்’. மூன்று நூல்கள், கெட்டி அட்டை, ஏறக்குறைய ஆயிரம் பக்கம் கொண்ட தொகுப்பை வெறும் ரூ.500 விலையில் கொடுத்து ஆச்சர்யப்படுத்துகிறார்கள். மார்க்ஸியம் பற்றி அறிமுகம் இல்லாதவர்களும்கூட அதைப் பற்றி புரிந்துகொள்வதற்கு எளிதாக கம்யூனிஸ்ட் அறிக்கைக்கு பில் கஸ்பர் எழுதிய வழிகாட்டி நூல், மூலதனம் நூலின் சாராம்சத்தை விளக்கும் டேவிட் ஸ்மித் எழுதிய சித்திரக் கதை இரண்டும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. பரிதியின் ‘மாந்தர் கையில் பூவுலகு’ இன்றைய சுற்றுச்சூழல் சிக்கல்களை மார்க்ஸிய நோக்கில் அணுகும் புதிய முயற்சி.

என்னைச் செதுக்கிய 3 நூல்கள்- ராஜுமுருகன், இயக்குநர்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

மொழியாக்கம்: எஸ்.வி.ராஜதுரை

இளம்பருவத்து தோழி

வைக்கம் முகம்மது பஷீர்

கலைக்க முடியாத ஒப்பனைகள்

வண்ணதாசன்

பளிச்

இந்த இவள்

கி.ராஜநாராயணன்

காலச்சுவடு பதிப்பகம்

விலை: ரூ.175

நாம் வாழும் காலத்தின் மாபெரும் கதைசொல்லி யான கி.ராஜநாராயணனின் வாசகர்களைக் குஷிப்படுத்துவதற்காக, அவரது புதிய குறுநாவலான ‘இந்த இவள்’ புத்தகத்தின் இடப்பக்கத்தில் கி.ராவின் கையெழுத்து வடிவம், வலப்பக்கத்தில் அவர் எழுதிய பாணியிலேயே அச்சு வடிவம் எனப் பதிப்பித்திருக்கிறார்கள்.  “இதை ஒரு பொக்கிஷம்போல வைத்திருப்போம்” என்கிறார்கள் கி.ரா வாசகர்கள். அட்டகாசம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x