Published : 10 Jan 2019 08:50 AM
Last Updated : 10 Jan 2019 08:50 AM

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு: கீழ்வெண்மணிக் குறிப்புகள்

செ.சண்முகசுந்தரம்

அன்னம் வெளியீடு

வசைமண்

மார்ட்டீன் ஓ’ கைன்

தமிழில்: ஆர்.சிவகுமார்

காலச்சுவடு வெளியீடு

அன்புள்ள ஏவாளுக்கு

ஆலிஸ் வாக்கர், தமிழில்: ஷஹிதா

எதிர் வெளியீடு

தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி

சு.வேணுகோபால்

தியாகு நூலகம் வெளியீடு

புனைவு என்னும் புதிர்: ஷோபாசக்தியின் 12 கதைகள்

விமலாதித்த மாமல்லன்

சத்ரபதி வெளியீடு

ஆஹா

ராஜ் கௌதமன் நூல்கள் வரிசை

என்சிபிஹெச் வெளியீடு

விலை: ரூ.1,670

சங்க இலக்கியங்கள், புதுமைப்பித்தன், வள்ளலார் என்று வெவ்வேறு ஆய்வுத் தளங்களைத் தனித்த பார்வையோடு அணுகியவர் ராஜ் கௌதமன். புனைவாகவும் தன்வரலாறாகவும் அமைந்த அவரது சிலுவைராஜ் தொடர் வரிசை நூல்கள் அவரது இலக்கிய எழுத்தாளுமைக்கு உதாரணங்கள். ஏற்கெனவே வெளிவந்து பதிப்பில் இல்லாத புத்தகங்களையும், புதிய புத்தகங்களையும் (9 புத்தகங்கள் - ஆய்வு நூல்கள் மற்றும் ‘காலச்சுமை’ நாவல் உட்பட) என்சிபிஹெச் பதிப்பகம் கொண்டுவந்திருக்கிறது.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்

தென்னாட்டுப் போர்க்களங்கள்

கா.அப்பாத்துரை

பூம்புகார் பதிப்பகம்

விலை: ரூ.200

சங்ககாலம் தொடங்கி இந்திய சுதந்திரப் போராட்டக்காலம் வரையிலான தமிழர் வரலாற்றை எளிமையாக அறிமுகப்படுத்தும் நூல் இது. போர்களை மைய இழையாகக் கொண்டு கால வரிசைப்படி அதைத் தொகுத்துத் தந்திருக்கிறார் தமிழறிஞரும் பன்மொழிப் புலவருமான கா.அப்பாத்துரை.

என்னைச் செதுக்கிய 3 நூல்கள்- ஜீ.வி.பிரகாஷ், நடிகர், இசையமைப்பாளர்

கற்றதும் பெற்றதும்

சுஜாதா

வந்தார்கள் வென்றார்கள் 

மதன்

கிருஷ்ணா

ஓஷோ

நச்

இலக்கிய வாசிப்பாளராகவும் எழுத்தாளராகவும் திரையுலகுக்குள் அடியெடுத்துவைத்தவர் இயக்குநர் தங்கர் பச்சான். தங்கர் பச்சானின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. அதைக் கொண்டாடும் விதமாக ‘வெள்ளை மாடு’ தொகுப்பு இப்போது சிறப்புப் பதிப்பாக வெளிவந்திருக்கிறது. இந்தத் தொகுப்பிலுள்ள ‘கல்வெட்டு’ கதைதான் ‘அழகி’ என்ற திரைப்படமாகியது. கூடவே, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ நாவலின் புதிய பதிப்பும் வெளியாகியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x