Published : 07 Jan 2019 09:02 AM
Last Updated : 07 Jan 2019 09:02 AM

நான் என்னென்ன வாங்கினேன்?

“என் மதிப்புக்குரிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எனது புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற விருப்பமிருந்தது.

எஸ்ரா அவரது தேசாந்திரி அரங்கில் எல்லோருக்கும் ரொம்ப பிஸியாகக் கையெழுத்துப் போட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு எனது புத்தகத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தேன்” என்றார் ‘லிலித்தும் ஆதாமும்’ புத்தகத்தை எழுதிய நவீனா. ஏற்கெனவே ஆங்கிலத்தில் இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ள ஆங்கில உதவிப் பேராசிரியரான நவீனாவின் முதல் தமிழ்ப் புத்தகம் இது.

“சமயவேல் மொழிபெயர்த்த ‘அன்னா ஸ்விர் கவிதைகள்’, கரன் கார்க்கியின் ‘மரப்பாலம்’, தேன்மொழி தாஸின் ‘வல்லபி’, பா.வெங்கடேசனின் ‘வாராணசி’, பெரு.விஷ்ணுகுமாரின் ‘ழ என்ற பாதையில் நடப்பவன்’ ஆகிய புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். இன்னும் புத்தக வேட்டை முடியவில்லை” என்ற நவீனா, “இந்தியாவின் பொருளாதார நெருக்கடிகளுக்குப் பின்பாகப் பல மாநிலங்களில் புத்தகக்காட்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இங்கே திருவிழாபோல நடக்கும் புத்தகக்காட்சி மகிழ்ச்சியளிக்கிறது. சென்னையில் மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புத்தகக்காட்சி நடந்தது. சென்னை புத்தகக்காட்சியை பிரம்மாண்டமாக நடத்தும் பபாசிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x