Published : 09 Jan 2019 09:23 AM
Last Updated : 09 Jan 2019 09:23 AM

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

1) பாஜக எப்படி வெல்கிறது?

பிரசாந்த் ஜா

தமிழில்: சசிகலா பாபு 

எதிர் வெளியீடு

2) கதைகள் செல்லும் பாதை

எஸ்.ராமகிருஷ்ணன்

தேசாந்திரி வெளியீடு

3) நிலநடுக் கோடு

விட்டல் ராவ்

பாரதி புத்தகாலயம் வெளியீடு

4) அன்னா ஸ்விர் கவிதைகள்

தமிழில்: சமயவேல் 

தமிழ்வெளி வெளியீடு

5) நடுகல்

தீபச்செல்வன்

டிஸ்கவரி வெளியீடு

ஆஹா

போர்ஹெஸ் கதைகள்

தமிழில்: பிரம்மராஜன்

யாவரும் வெளியீடு

விலை: ரூ.550

20-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்பானிய எழுத்தாளர்களில் ஒருவரான போர்ஹெஸ், உலகம் முழுக்க எழுத்தாளர்களையும் வாசகர்களையும் பாதித்தவர். தன் வாழ்நாளில் நாவலே எழுதாத இவர் லத்தீன் அமெரிக்க நாவல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுகிறார். ஐநூறு பக்க நாவல் தரும் பிரம்மாண்டத்தையும் திகைப்பையும் தனது சிறுகதைகளில் உருவாக்கிவிடக் கூடியவர். அனுபவங்கள், தத்துவங்கள், கருத்தியல்கள், வரலாறு எல்லாமும் ஒரு புனைவுதானோ என்ற எண்ணத்தை உருவாக்கக் கூடிய போர்ஹெஸின் சிறந்த கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. தமிழின் சிறந்த கவிஞர்களுள் ஒருவரான பிரம்மராஜனின் பல ஆண்டு கால உழைப்பில் உருவான மொழிபெயர்ப்பு இது.

என்னைச் செதுக்கிய 3 நூல்கள் -அறிவழகன், இயக்குநர்

ஜெயகாந்தன் சிறுகதைகள்

ஜெயகாந்தன்

சுஜாதா சிறுகதைகள்

சுஜாதா

அர்த்தமுள்ள இந்துமதம்

கண்ணதாசன்

பளிச்

மேற்கத்திய ஓவியங்கள்

பி.ஏ.கிருஷ்ணன்

காலச்சுவடு பதிப்பகம்

விலை: ரூ.975

கலைகளில் ஈடுபாடுகொள்ளும்போது வாழ்க்கை இன்னும் அழகாகிறது. புரிதலின்மை காரணமாக ஓவியத்திலிருந்து விலகிவிடும் கலை ரசிகர்களை இன்னும் இணக்கமாக ஓவியத்தை அணுகும்பொருட்டு ‘மேற்கத்திய ஓவியங்கள்’ நூல் வரிசையில் நவீன ஓவியங்களை பி.ஏ.கிருஷ்ணன் அறிமுகப்படுத்துகிறார். இப்போது இரண்டாம் நூல் அழகான வடிவமைப்பில் வெளிவந்திருக்கிறது. சுமார் 250 வண்ண ஓவியங்களுடன் 336 வண்ணப் பக்கங்கள். ஓவியத்தின் பின்புலம், வரலாறு, பேசுபொருள் என பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரையிலான நவீன ஓவியங்களை அறிமுகப்படுத்தும் நூல் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x