

பஞ்சும் பசியும்
தொ.மு.சி.ரகுநாதன்,
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
தி.நகர், சென்னை -17
விலை: ரூ.250
தொலைபேசி: 044-24331510
நெசவாளர்களின் வாழ்க்கையைப் பேசும் சொற்பமான நாவல்களில் தொ.மு.சி.ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற அந்நாவலின் சமீபத்திய பதிப்பு இது.
அன்பின் சிப்பி,
சோ.தர்மன்
அடையாளம் பதிப்பகம்,
புத்தாநத்தம்,
திருச்சி 621310.
விலை ரூ.130
தொலைபேசி: 04332 273444
கரிசல் வாழ்க்கையைக் கிராமத்தினரின் பேச்சுகளில், நாட்டார் கதை மரபில் கதைகளாகப் புனையும் சோ.தர்மனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு இது.
சாலை விபத்து தீர்வும் நஷ்டஈடும்
ஏ.கே.எஸ்.தாஹிர்,
ஏ.எஸ்.பிலால்
பாரதி புத்தகாலயம்,
தேனாம்பேட்டை,
சென்னை-18
விலை ரூ.70
தொலைபேசி: 044-24332424
சாலை விபத்துகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கூறுகிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள். கூடவே, விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்டஈடு பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்குகிறார்கள்.
காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும்
க.நரேந்திரன்
என்சிபிஹெச் வெளியீடு
அம்பத்தூர், சென்னை 96
விலை ரூ.250
தொலைபேசி: 044-26251968
காலனிய காலத்தின் மருத்துவ வரலாறு குறித்து விரிவாகப் பேசும் நூல் இது. நமது சூழலில் மருத்துவக் காலனியம் பற்றிய அனைத்துப் புள்ளிகளையும் இணைத்துப் பேசுகிறது.
மரங்களும் அதன் பயன்களும்
சூர்யா சரவணன்
பாபா வெளியீடு
மேற்கு மாம்பலம்
சென்னை 33
விலை ரூ.80
தொலைபேசி: 99523 35505
அரச மரம், அத்தி மரம், மூங்கில், ஆலம், இலுப்பை, தேக்கு, மா, பனை, தென்னை, முருங்கை, புளி, வேம்பு, வாழை, தெய்வ விருட்சம் போன்ற மரங்களின் பயன்பாடுகள் குறித்து பேசும் நூல்.
வாழ்வின் ரகசியங்கள்
வி.ராசிராஜன்
பராஸ் வெளியீடு
அண்ணா சாலை,
சென்னை 2
விலை ரூ.300
தொலைபேசி: 93838 01234
‘அறிவுக் கண்களைத் திறப்பதற்கு ஆன்மீகக் கலவி அவசியம்’ என்று நம்பும் வி.ராசிராஜன், வாழ்வை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைக் கற்பிக்கிறார்.