Published : 12 Jan 2019 09:15 AM
Last Updated : 12 Jan 2019 09:15 AM

நான் என்னென்ன வாங்கினேன்?

சிறுவர் இலக்கியத்தில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் விழியனைச் சந்தித்தோம். அவருக்கு மிகவும் பிடித்தமான எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’ புத்தகம் குறித்துப் பேசும்போது ஒரு குழந்தைபோலவே குதூகலமாகிவிட்டார்.

“என் வாழ்க்கையில் கு.அழகிரிசாமி சிறுகதைகள், புதுமைப்பித்தன் சிறுகதைகள், ஆயிஷா நடராஜனின் ‘யாருக்கான வகுப்பறை?’ மற்றும் ‘ஆயிஷா’ ஆகிய புத்தகங்கள் ரொம்பவே முக்கியமானவை. இந்த வரிசையில் ‘குட்டி இளவரசன்’ புத்தகத்துச் சிறப்பான இடம் உண்டு. நான் எழுதுவதற்கு முன்பாக எப்போதுமே ‘குட்டி இளவரசன்’ புத்தகத்தை வாசிப்பேன். என் மனதுக்கு மிகவும் நெருக்கமான புத்தகம் அது. ஒவ்வொரு வாசிப்பிலும் என்னை உற்சாக மனநிலைக்குக் கொண்டுசென்றுவிடும்” என்றவர், “இந்தப் புத்தகக்காட்சியில், ஆயிஷா நடராஜனின் ‘1729’, விஷ்ணுபுரம் சரவணனின் ‘வானத்துடன் டூ’, பால பாரதியின் ‘வானத்திலிருந்து எரிகல்’, யூமா வாசுகியின் ‘தியா’ ஆகிய புத்தகங்களை வாங்கினேன்’’ என்றார் விழியன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x