Published : 09 Dec 2018 09:39 AM
Last Updated : 09 Dec 2018 09:39 AM

நகரங்களில் ஒளிந்திருக்கும் கிராமம்

ஓவியர் ஞானப்பிரகாசம் ஸ்தபதியின் நீர்வண்ண ஓவியங்கள் அசத்துகின்றன. பெரும்பாலும் நீலமும் மஞ்சளும் ஆக்கிரமிக்கின்றன. “நீலம் வானத்தையும் (தண்ணீர்) மஞ்சள் சூரியனையும் குறிக்கின்றன. கிராமங்களெல்லாம் நகரங்களாகிக் கொண்டிருக்கின்றன. எனவே, நான் நகரங்களை வரையும்போது அதன் நிழல் நீரில் பிரதிபலிப்பதாக வரைகிறேன். நகரத்தை ஒரு கிராமம்போலவே சித்தரிக்க விரும்புகிறேன். சமூகத்தின் சிக்கல்களைத்தான் நான் ஓவியங்களாக்குகிறேன்” என்கிறார் ஞானப்பிரகாசம் ஸ்தபதி. அற்புதம். அபாரம்!

நாவல் புரட்சி

ஈரானிய எழுத்தாளரான சஹார் டெலிஜானியின் முதல் நாவலான ‘சில்ட்ரன் ஆஃப் தி ஜாகராண்டா ட்ரீ’ இதுவரை 80 நாடுகளுக்குச் சென்றுசேர்ந்திருக்கின்றன. ஈரானியப் புரட்சியில் பலியானவர்களின் கதையைப் பேசும் இந்த நாவலுக்கு முன்பாக எழுதிய மூன்று நாவல்களையும் இவர் பிரசுரிக்கவில்லை. அவையெல்லாம் பயிற்சிக்காக எழுதப்பட்டவையாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x