நீங்களும் வாசியுங்கள்: சர்க்கரைக் கொள்கைகளில் மாற்றம் வேண்டும்

நீங்களும் வாசியுங்கள்: சர்க்கரைக் கொள்கைகளில் மாற்றம் வேண்டும்
Updated on
1 min read

சர்க்கரைத் துறையின் முக்கியப் பங்கேற்பாளர்களான கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலைகள், நுகர்வோர் ஆகிய மூவரும் பயன்பெற வேண்டும் என்று அரசு இத்துறையின் எல்லா அம்சங்களையும் கட்டுபடுத்தி நெறிமுறை செய்தாலும் எவ்விதப் பயனுமில்லை என்கிறது இந்தக் கட்டுரை.

விவசாயிகளின் ஓட்டுக்காக எவ்வித விஞ்ஞானபூர்வமான அடிப்படையும் இல்லாமல் கரும்பு ஆதார விலையை அரசு உயர்த்துகிறது. மற்றொருபுறம் சர்க்கரையின் விலையைக் கட்டுப்படுத்த முயல்கிறது. இதனால், விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையும் சர்க்கரை ஆலைகளில் நஷ்டக்கணக்கும் உயர்கின்றன. சர்க்கரைக்கான வெளிச்சந்தை விலை அதிகரிப்பால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர். சரியான கரும்பு விலை நிர்ணயம், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மீண்டும் நடத்துவது, எத்தனால் என்ற எரிபொருள் உற்பத்தி, சர்க்கரை ஏற்றுமதியை ஊக்குவித்து சர்க்கரை ஆலைகளில் லாபத்தை உறுதிசெய்வது போன்ற யோசனைகளை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது. சர்க்கரைத் துறையின் அனைத்துப் பிரச்சினைகளையும் விஞ்ஞானபூர்வமாக அணுகி, தரவுகளுடன் ஆராய்ந்து எளிமையாக எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in