

காந்தி ஜெயந்தி வருகிறது. இந்த ஆண்டின் ஜெயந்தியைத் தமிழில் காந்தி தொடர்பான 3 அரிய புத்தகங்களை நண்பர்களுக்குப் பரிசளித்துக் கொண்டாடுங்கள்!
1. காந்தி வாழ்க்கை: லூயி ஃபிஷர் (தமிழில் தி.ஜ.ர.): காந்தியின் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்டதிலேயே முதன்மையான புத்தகம் லூயி ஃபிஷருடையதே. இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே ரிச்சர்டு அட்டன்பரோ ‘காந்தி’ திரைப்படத்தை எடுத்தார். காந்தியைக் கடவுளாகக் காட்டாமல் காந்தியாகவே காட்டுவது இதன் சிறப்பு.
2. இன்றைய காந்தி - ஜெயமோகன்: காந்தியின் முக்கியத்துவம் அதிகரித்திருக்கும் இந்தத் தருணத்தில் அவரைப் பற்றிய விமர்சனங்களும் (பெரும்பாலும் அவதூறுகள்தான்) அதிகரித்திருக்கின்றன. அத்தகைய விமர் சனங்களுக்கு விரிவான பதிலை ஜெயமோகன் இந்த நூலில் முன்வைக்கிறார்.
3. காந்திஜியின் இறுதி 200 நாட்கள் - வி. ராமமூர்த்தி (தமிழில்: சி. இலக்குவன்): இந்து-முஸ்லிம் கலவரம், தேசப்பிரிவினை, காந்தி படுகொலை ஆகிய கொந்தளிப்பான சம்பவங்களை உள்ளடக்கி, காந்தியின் கடைசி 200 நாட்களை இந்த நூல் ஆவணப்படுத்துகிறது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான வி. ராமமூர்த்தி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக்கம் இந்த நூல்.