

‘அந்நியன்’ நாவல் வழியாகத் தமிழ் வாசகர்களைப் பாதித்த பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பெர் காம்யுவின் நூற்றாண்டை ஒட்டி வெளியாகியுள்ள நூல் இது. ஆல்பெர் காம்யுவின் நோபல் பரிசு ஏற்புரை, சிறுகதை, பயணக்குறிப்புகள், நேர்காணல்கள், கட்டுரைகள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இது. மரணதண்டனைக்கு எதிரான காம்யுவின் கட்டுரை, தற்போது அவசியமானது.
ஆல்பர் காம்யு குறித்து ஓரான் பாமுக் எழுதிய முக்கியமான கட்டுரையும் இதில் இடம்பெற்றிருக்கிறது. இந்த நூலை சா.தேவதாஸ் மொழிபெயர்த்துள்ளார். படைப்பாளியாக அறிமுகமான ஆல்பெர் காம்யுவின் அரசியல் சார்பு, முரண்பாடுகள், விமர்சனங்கள் ஆகியவற்றை இந்தப் புத்தகம் வழி தெரிந்துகொள்ள முடிகிறது. ஆல்பெர் காம்யுவை அதிகமாக அறிந்துகொள்ள இந்த நூல் உதவிகரமாக இருக்கும்.
ஆல்பெர் காம்யு நூற்றாண்டு நாயகன் மொழிபெயர்ப்பும் தொகுப்பும்:
சா.தேவதாஸ்,
கருத்துப்பட்டறை
2, முதல் தளம்,
மிதேசு வளாகம், நான்காவது நிறுத்தம்,
திருநகர், மதுரை- 625 006
விலை: ரூ.120/-
தொலைபேசி: 9842265884