Published : 02 Dec 2018 11:31 AM
Last Updated : 02 Dec 2018 11:31 AM

360: ஈரோட்டு ஆளுமைகளைக் கௌரவிக்கும் தமிழாசிரியர்

ஈரோட்டிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஓவியராகப் பணியில் சேர்ந்து பிறகு தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றவர் எம்.சுந்தரன். தனது ஓவிய, இலக்கிய வளர்ச்சிக்கு வழிவகுத்த ஈரோட்டு ஆளுமைகளை ஓவியமாக வரைந்து அவர்கள் குறித்த அறிமுகக் கட்டுரையையும் பேஸ்புக்கில் பதிவிட்டுவருகிறார் சுந்தரன். ஈரோடு மட்டுமல்லாமல் தமிழக ஆளுமைகள் பலரையும் அடுத்தடுத்து வரையத் திட்டமிட்டிருக்கிறாராம்.

வீரபாண்டியன் ஐஏஎஸ்ஸின் முதல் நாவல்

ஐஏஎஸ் அதிகாரி க.வீரபாண்டியனின் முதல் நாவல் ‘சலூன்’ யாவரும் பதிப்பக வெளியீடாக இன்று மாலை 6 மணிக்கு எழும்பூரிலுள்ள இக்சா அரங்கில் வெளியாகிறது. “இந்த நாவலை வாசிக்கும்போது உங்களுக்கும் ஒரு முத்தையா தாத்தாவோ, குட்டியோ, செல்வா அண்ணனோ நினைவுக்கு வரலாம். அந்த நினைவுகள் பழைய காதலின் நினைவுகளைப் போல உங்கள் மனதைப் பரவசமூட்டக்கூடும்” என்கிறார் வீரபாண்டியன். | தொடர்புக்கு: 90424 61472

ரஷ்யாவைக் கலக்கும் அலிஸா

கார்டியனின் மிகத் திறமையான செல்வாக்குமிக்க இளம் நபர்களின் பட்டியலில் இடம்பிடித்த ரஷ்ய இளங்கவி அலிஸா கனீவா, கவிதைகள் மட்டுமல்லாமல் நாவல், உரைநடை, கட்டுரை எனப் பல்வேறு வடிவங்களில் முத்திரை பதித்தவர். அலிஸாவின் சமீபத்திய நாவலான ‘தி பிரைடு அண்ட் தி பிரைடுக்ரூம்’ சர்வதேச அளவில் சக்கைபோடு போடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x