

கவிஞர் இன்குலாப்பின் இரண்டாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு, லயோலா கல்லூரியிலுள்ள லாரன்ஸ் சுந்தரம் அரங்கில் இன்று (டிசம்பர் 1) காலை 10 மணி அளவில் நடக்கிறது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், கவிதை ஆய்வரங்கம், கவியுரை என்று பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இன்குலாப்பின் நேர்காணல் முழுத் தொகுதியும் வெளியிடப்படவிருக்கிறது. இந்நூலை எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் வெளியிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொள்கிறார். மானுடம் பாடிய கவிஞரை நினைவுகூர்வோம்!