Published : 23 Dec 2018 07:49 am

Updated : 23 Dec 2018 07:49 am

 

Published : 23 Dec 2018 07:49 AM
Last Updated : 23 Dec 2018 07:49 AM

இணையகளம்

தன்னுடைய பிம்பங்களைத் தானே தின்று வாழும் நார்சிஸ்ட் எழுத்தாளர்களிடையே எத்தனை எத்தனை மூத்த படைப்பாளிகளையும் சமகாலப் படைப்பாளிகளையும் பிரபஞ்சன் கொண்டாடினார்! எத்தனை இளம் படைப்பாளிகளைப் பேசியும் எழுதியும் கைதூக்கிவிட்டார் என்பதை நினைக்காமல் இருக்க முடியுமா? பிரபஞ்சன் தனிமனிதர் அல்ல, இயக்கம். நான் கூட்டங்களில் சிறந்த ஆடைகளை அணிய விரும்புகிறவன். ஆனால், பிரபஞ்சனும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக இருந்தால் எனக்கு மிகவும் யோசனையாக இருக்கும். ஏனெனில், நான் எப்படி ஆடை அணிந்துவந்தாலும் அதைவிடச் சிறந்த ஆடையைத்தான் அவர் அணிவார். ‘அழகன்’ என்று பொறாமையுடன் மனதில் நினைத்துக்கொள்வேன். பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும் பிரபஞ்சனுக்கும் சின்ன வருத்தம். கொஞ்ச நாள் பேசாமல் இருந்துவிட்டோம். ஒருநாள் அதிகாலையில் “பிரபஞ்சன் சார்கூட பேசவே இல்லையே” என்று அதிர்ச்சியுடன் நினைத்துக்கொண்டேன். அப்போதே அவருக்கு போன் செய்து “எப்படி இருக்கீங்க சார்?” என்றேன் தடுமாற்றத்துடன். ஒரு வினாடி தாமதமின்றி “ஹமீது இன்னைக்கு சாயந்தரம் பார்க்கலாமா?” என்றார். அதுதான் பிரபஞ்சன்!

- மனுஷ்ய புத்திரன்


வானம்பாடி இயக்கத்திலிருந்து அதன் பிறகும் தொடர்ச்சி

யாக இயங்கிவந்த ஆளுமை, நவீன எழுத்துலகில் கருத்தியலோடு படைப்புகளைத் தந்த எழுத்தாளர் பிரபஞ்சன். குறிப்பாகக் குடும்பம் என்னும் அமைப்பின் மீதும் திருமணம் என்னும் நிறுவனத்தின் மீதும் பெரியார் முன்வைத்த விமர்சனங்களைத் தன் படைப்புக்குள் கொண்டுவந்தவர் அவர். சாதி ஒழிப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, பெண்ணியம், பெரியாரியம், தமிழின உரிமை ஆகியவற்றில் பற்றுதல் கொண்டவர். அரசியலற்ற இலக்கியமே நவீன இலக்கியம் என்னும் நிலைப்பாட்டுக்கு எதிராய் இயங்கியவர். மெல்லிய நகைச்சுவையும் நளினமும் உறவுபேணும் தோழமையும் எப்போதும் பிரபஞ்சனின் அடையாளங்கள். அந்த அடையாளங்களுடன் வாழ்வார் பிரபஞ்சன்.

- சுகுணா திவாகர்

பிரபஞ்சனின் அன்புக்குரியவர்கள் அனைவரும் நன்றி செலுத்த வேண்டியது பி.என்.எஸ்.பாண்டியன் என்ற அற்புத மனிதருக்கு. மணக்குள விநாயகர் மருத்துவமனைக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

- ஜி.குப்புசாமி

எழுத்திலும் நேரிலும் தமிழின் மிகப் பெரிய ஸ்டைலிஸ்ட். மிகுந்த நேர்மறையான மனிதர். நேர்மறையான வாழ்க்கை நோக்கு கொண்ட எழுத்தாளர்களுக்கு நிகழும் ஆழமின்மை என்ற விபத்தில் சிக்கிக்கொள்ளாதவர். தனிப்பட்ட மனிதர்

களின் அக தரிசனங்களையும் ஒரு காலகட்டத்தின் விரிந்த தரிசனத்தையும் போக்கையும் ஒருசேர எழுதத் தெரிந்த மிகச் சிலருள் ஒருவர். பிரபஞ்சன் எழுத்துகள் மூலமாக மானுடம் இன்னொரு முறை எழுந்தது. வணக்கங்கள்!

- போகன் சங்கர்



Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x