Last Updated : 19 Dec, 2018 09:28 AM

 

Published : 19 Dec 2018 09:28 AM
Last Updated : 19 Dec 2018 09:28 AM

அபிநயமும் நிருத்தமும் இரண்டு கண்கள்!

இயல், இசை, நாடகம் எனப் படும் மூன்று கலைகளும் சங்கமிக்கும் கலைதான் நாட்டியம். பாரம்பரியமான இந்தக் கலை வடிவத்தை நவீன முறையில் சொல்வதானால் ஒலியும் ஒளியும் சேர்ந்த (Audio Visual Presentation) கலை எனலாம். பரதநாட்டியத்தில் நாட்டியத்துக்கு எவ்வளவு முக்கியம் தரப்படுகிறதோ அந்த அளவுக்கு இசைக்கும் முக்கியத்துவம் இருக் கும். அப்படி இசையும் நாட்டியமும் சரிவிகிதத்தில் கலந்து மிளிர்ந் தது, புஷ்பாஞ்சலி கல்சுரல் டிரஸ் டின் மார்கழி நாட்டிய விழாவில் சங்கீதா அதித்குமாரின் நாட்டிய நிகழ்ச்சி.

சொல்கட்டுகளுடன் கூடிய மல் லாரி, `யார் ஆடினார்’ என்னும் சிவபதம், தேவயானியின் ஆற்றா மையை வெளிப்படுத்தும் பதவர்ணம், பால் வடியும் முகம் கீர்த்தனம் போன்றவற்றுக்கு சங்கீதாவின் குரு நிர்மலா உமா சங்கரின் நட்டு வாங்கமும், தீபா பாலகிருஷ்ணனின் வாய்ப்பாட்டும், சடகோபனின் வய லினும் சேஷாத்ரியின் மிருதங்கமும் பக்கபலமாக இருந்தன.

குடும்பத்தின் பக்கபலம்

சங்கீதாவின் இந்த நாட்டிய நிகழ்ச்சி சிறப்பதற்கு இவர்கள் கார ணம் என்றால், அவரின் ஒட்டுமொத்த கலை வாழ்வு சிறக்கவும் காரண மாக இருப்பவர்கள் அவரின் கணவர் அதித்குமாரும் அவரின் குடும்பத்தினரும். நிகழ்ச்சிக்கு வந் திருந்தவர்களையும் கலைஞர்களை யும் அதித்குமார் ஓடியோடி உப சரிக்க, நாத்தனார், அண்ணியின் நடனத்தை தொகுத்து வழங்குவதை சாதாரணமாக எந்த அரங்கிலும் பார்க்க முடியாது.

பெரும்பாலான பெண்கள் பிறந்த வீட்டில் கற்றுக்கொள்ளும் கலை, அவர்கள் புகுந்த வீட்டுக்கு செல்லும்போது, அவர்களின் ஆதரவு கிடைக்காமல் அவரிடம் இருந்து மறைந்து போகும். ஆனால், சங்கீதா வுக்கு திருமணத்துக்குப் பின்தான் அவரின் பரதக் கலை சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கியது. சங்கீதா வின் நடனத்தை ஆதரிக்கும் பட்டியலில் அவரின் நான்கு வயது மகனும் முக்கியமானவர்.

பயிற்சியும் முயற்சியும்

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் சங்கீதா. அவரின் தந்தையும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் பாடு பவர். மும்பையின் தபஸ்யா நடனப் பள்ளி, நாளந்தா நடன ஆராய்ச்சி மையம், நடன மேதை பேராசிரியர் சி.வி.சந்திரசேகர் ஆகியோரிடம் நடனப் பயிற்சியைப் பெற்று, மும்பையில் தான் படித்த நடனப் பள்ளியின் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நடனப் பயிற்சி வழங்கியவர் சங்கீதா. அதோடு, நட்டுவாங்கம் பயிற்சியை பேரா சிரியர் கணேஷ் அய்யரிடமும், நடன வடிவமைப்பு நுணுக்கங்களை மும்பையின் ரோகினி சிங்வி ஆகியோரிடமும் பெற்றிருப்பவர். தற்போது நாட்டிய கலா ரத்னா நிர்மலா உமாசங்கரிடம் நாட்டியப் பயிற்சியைத் தொடர்ந்துவரும் சங்கீதா, இதுவரை மும்பையிலும் குஜராத்திலும் செயின்ட் சேவியர் கல்லூரி, மித்திபாய் கல்லூரி, என்.எம். கல்லூரி போன்ற பிரபல பள்ளி, கல்லூரிகளின் கலை விழாக்களிலும் எண்ணற்ற நாட்டிய நிகழ்ச்சிகளுக்கான வடிவமைப்பை உருவாக்கியவர்.

கனடாவின் சண்ட்னியா அகாடமி, குஜராத்தின் உத் கிராஷ் டேன்ஸ் அகாடமி போன்ற இடங்களில் நடந்த கலை நிகழ்ச்சி களிலும் தன்னுடைய பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார்.

அர்த்தம் புரிந்தால்தான்...

பரதநாட்டியத்துக்கு நிருத்தம் அபிநயம் இரண்டுமே முக்கியம். இரண்டும் எனக்கு இரண்டு கண்கள் என்னும் சங்கீதா, “நான் ஆடிய எல்லா உருப்படியுமே நிருத்தத்துக்கு முக்கியத்துவம் தரும் உருப்படிகள்தான். ஆனால் அதற்கு அபிநயமும் முக்கியம். முகத்தின் குறிப்புகளில் அந்த சாகித்யத்துக்கு உரிய பாவம் வெளிப்பட வேண்டும். வரிகளின் அர்த்தம் புரிந்தால்தான் பாவத்தை வெளிப்படுத்த முடியும்” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x