Published : 10 Nov 2018 08:27 AM
Last Updated : 10 Nov 2018 08:27 AM

நூல் நோக்கு: காந்தி குறித்த 200 தகவல்கள்

காந்தியைப் பற்றிய சுவையான 200 தகவல்களின் தொகுப்பாக மலர்ந்திருக்கிறது இந்த நூல். காந்தியின் எளிய உடை, அவரது சிக்கன குணம், காந்திக்குப் பிடித்த ஆட்டுப்பால், காந்தி குருவாகப் பாவித்த குரங்கு பொம்மைகள், ரஷ்கின் எழுதிய ‘கடையனுக்கும் கதிமோட்சம்’ நூலை ஏன் காந்திக்குப் பிடித்தது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டுக்கு காந்தி வந்தபோது நிகழ்ந்த சம்பவங்கள், தமிழர்களுடன் தொடர்புடைய காந்தியின் தகவல்கள் போன்றவை நூலுக்குப் பலம் சேர்க்கின்றன. எளிய மனிதர்களுடனான காந்தியின் உரையாடலும், அதிலிருந்து நமக்கு அவர் உணர்த்தும் செய்தியும் சுவாரசியம் மிகுந்ததாக இருக்கின்றன.

- மானா பாஸ்கரன்

மகாத்மா 200

இளசை சுந்தரம்

விஜயா பதிப்பகம்

கோயம்புத்தூர் - 641 001.

விலை ரூ.145

தொடர்புக்கு: 0422-2382614

வட்டார வரலாற்றின் புதிய முகம்

1,751 சதுர கி.மீ. நிலவியல் பரப்புள்ள சிறிய மாவட்டமான பெரம்பலூரைப் பற்றி 572 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் ஜெயபால் இரத்தினம். தமிழக உள்ளாட்சித் துறையில் 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பின், தனது சொந்த மண்ணின் முழுமையான வரலாற்றை அறிந்துகொள்ளும் தேடலுடன் இந்நூலைத் தொகுத்திருக்கிறார். அவரவர் வட்டார வரலாற்றிலிருந்து நாட்டின் வரலாற்றை அணுகும்போதே ஆர்வமும் ஈடுபாடும் வரும். அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தின் வரலாற்றை நாட்டின் வரலாற்றுடன் ஒப்பிட்டு இந்த நூலில் தொகுத்திருக்கிறார். வரலாற்று ஆய்வாளர்களின் பணி என்று ஒதுங்கிவிடாமல் தற்போது தனி நபர்கள் களத்தில் இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

- அ.வெண்ணிலா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x