நீங்களும் வாசியுங்களேன்: இந்து மதத்தில் இடதுசாரி உண்டா?

நீங்களும் வாசியுங்களேன்: இந்து மதத்தில் இடதுசாரி உண்டா?
Updated on
1 min read

ஒரே கடவுள் அல்லது உருவமில்லாத கடவுள் என்ற கொள்கையைக் கொண்டவை யூதம், கிருத்துவம், இஸ்லாம் ஆகிய அப்ரஹாமிய மதங்கள்.

இம்மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்து மதம் மீதான புரிதலில் ஏற்படும் தடுமாற்றத்தை விரிவாகப் பேசுகிறது இக்கட்டுரை. இந்து மதம் பன்மைத்துவமானது.

வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட பல கடவுள்கள் இதில் உண்டு. சில கடவுள்கள் ஒழுங்கீன செயல் புரிபவர்களாகவும், அதே நேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான உயர்ந்த ஒழுக்கம் சார்ந்த சிந்தனைகளைக் கொடுப்பவர்களாவும் இருக்கின்றனர். செவ்வியல் முதல் இன்றைய நவீன காலம் வரை எல்லா கலைகளுக்கும் இந்து மதத்தின் பல கடவுள், பல குணாதிசயங்கள் கருப்பொருளாக இருந்துவருகிறது.

அதன் மூலமாக உருவமில்லாத, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உயர் சிந்தனையைத் தேடும் முயற்சியும் தொடர்கிறது.  அப்ரஹாமிய மதங்களில் இடதுசாரிப் பிரிவுகள் உண்டு. ஆனால், இந்தப் பன்மைத் தன்மையைக் கண்டறியாததால் இந்துமத இடதுசாரிப் பிரிவு வளராமலே போய்விட்டது என்கிறது இக்கட்டுரை.

Left in Polytheism by Saikat Majumdar, Los Angels Book Review 2nd October 2018

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in