Last Updated : 24 Nov, 2018 10:07 AM

 

Published : 24 Nov 2018 10:07 AM
Last Updated : 24 Nov 2018 10:07 AM

பார்வையாளரிடம் உரையாடும் ஓவியங்கள்!

ஹைதராபாத் ஆகா கான் அகாடமியில் ஓவியத் துறை ஆசிரியராகப் பணிபுரியும் விஜயராகவன், ஹைதராபாதின் ஹேம்பர்க் ஹாலில் கடந்த வாரம் நடத்திய ஓவியக் கண்காட்சி கலை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் இளங்கலை பயின்ற இவர், டெல்லி கவின் கலைக் கல்லூரியில் முதுகலை பயின்றவர். சிற்பி தனபால், ஆர்.பி.பாஸ்கரனின் மாணவர். 2016-ல், ஜெர்மனியின் ‘பெர்லின் ஆர்ட் இன்ஸ்டிடியூட்’டால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயிற்சியளிக்கப்பட்டவர்களில் ஒரே இந்தியர் இவர். போர்ச்சுகல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இவரது ஓவியக் கண்காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

அவரது சமீபத்திய கண்காட்சியில் இடம்பெற்ற படைப்புகள், புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களின் கலவையில் உருவானவை. “படைப்பில் இடைவெளி அல்லது வெற்றிடம் இருக்க வேண்டும். அந்த இடைவெளியைப் பார்வையாளர் இட்டு நிரப்ப வேண்டும். தொடர்புகள் இல்லாத வெவ்வேறு விஷயங்களுக்கு இடையிலான உரையாடலை உருவாக்கும் முயற்சியே என் படைப்புகள்” என்கிறார் விஜயராகவன். தொகுப்பு: த.ராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x