நீங்களும் வாசியுங்களேன்: சுயக்கட்டுப்பாட்டு வங்கி முறை

நீங்களும் வாசியுங்களேன்: சுயக்கட்டுப்பாட்டு வங்கி முறை
Updated on
1 min read

இந்தியாவில் எல்லா வங்கிகளும் ஆர்பிஐயின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. வங்கிகளில் நிதிச் சிக்கல்கள் அதிகரிக்கும்போதெல்லாம் ஆர்பிஐயின் கட்டுப்பாடு கடுமையாகிறது. தற்போது, மத்திய அரசுக்கும் ஆர்பிஐக்கும் உள்ள உரசலுக்கு இவ்வாறான பிரச்சினைதான் காரணம். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மத்திய ரிசர்வ் வங்கி என்பது இல்லாமல் செட்டியார் சமூகத்தினரால் பல நாடுகளில் வங்கிகள் நடத்தப்பட்டன. இந்த வங்கிகள் இந்தியா, இலங்கை, மலேசியா, சீனா மற்றும் சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தன. நவீன வங்கிகளின் செயல்பாடுகளுடன் அந்தக் காலத்து செட்டியார் வங்கிகளை ஒப்பிட முடியாது என்றாலும் அவை சில கட்டுப்பாடுகளுடன் இயங்கின என்று இந்த ஆராய்ச்சிக் கட்டுரை எடுத்துரைக்கிறது. சந்தையின் கட்டுப்பாடு, சமூக ஒழுங்குமுறை, வங்கிகளுக்கிடையே நிதியைப் பகிர்ந்துகொள்வது, வங்கிகளுக்கிடையே வியாபாரம் தொடர்பான செய்திகளைப் பகிர்ந்துகொள்வது, இவற்றுக்கான முறைகளைச் செயல்படுத்துவது என இந்த வங்கிகள் செயல்பட்டன. இந்த வங்கி முறை தோல்வி அடைந்தது குறித்து இருவேறு கருத்துகள் இருந்தாலும் வங்கிகளின் சுயக்கட்டுப்பாடு குறித்த அவசியத்தை இந்த வரலாற்று ஆராய்ச்சி முன்நிறுத்துகிறது.

Caste as Self-regulatory club: evidence from a private banking System in 19th Century India by Malavika Nair

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in