Published : 24 Nov 2018 10:05 AM
Last Updated : 24 Nov 2018 10:05 AM

நீங்களும் வாசியுங்கள்: வரி ஏய்ப்பும் போலி விற்பனை ரசீதும்

போலி ரசீது, போலி நிறுவனங்கள் மூலமாக ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துவரும் சிலரை மத்திய ஜிஎஸ்டி துறை சென்னையில் கைதுசெய்ததாக சமீபத்தில் செய்தி வெளிவந்தது. மதிப்புக்கூட்டு வரி உள்ள அனைத்து நாடுகளிலும் இவ்வகை வரி ஏய்ப்பு இருப்பது ஒரு வரலாற்று உண்மை.

இபிடபிள்யூ இதழில் மேற்கு வங்க அரசின் வணிக வரி ஆணையர்கள் இருவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளனர். அதில் மதிப்புக்கூட்டு வரி அமலுக்கு வந்த பிறகுப் போலி ரசீதுகளும் குறிப்பாக மாநிலங்களுக்கு இடையே நடக்கும் வியாபாரத்தில் வரி ஏய்ப்புகள் எவ்வாறு நடந்துவருகின்றன என்பதை விளக்கமாக எழுதியுள்ளனர். இந்த ஆணையர்கள் 25 வியாபார நிறுவனங்களைத் தொடர் கண்காணிப்பு செய்துள்ளனர். கண்காணிப்புக்குப் பிறகு இந்த நிறுவனங்களும் அவர்களுடன் வியாபாரம் செய்யும் மற்ற நிறுவனங்களும் விற்பனை வரி ஏய்த்தது தெரியவந்தது. வரி ஏய்ப்புகளைக் குறைப்பதற்கான சாத்தியங்கள் ஜிஎஸ்டியில் உண்டு என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், இப்போது கண்டுபிடிக்கப்பட்ட வரி ஏய்ப்பு முயற்சிகள் ஜிஎஸ்டி முறையை மேலும் வலுவாக்க வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.

‘Value Added Tax Scams and Introduction of the Goods and Services Tax’ by Raktim Dutta, Binod Kumar, Economic and Political Weekly, November 3, 2018.

- இராம. சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x