Last Updated : 06 Oct, 2018 09:58 AM

 

Published : 06 Oct 2018 09:58 AM
Last Updated : 06 Oct 2018 09:58 AM

நூல் நோக்கு: சிவாஜியின் அரசியல் அத்தியாயம்

‘சிவாஜி ஆளுமை’ 3-வது பாகத்தில் சிவாஜியின் அரசியல் பிரவேசம் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. மிகச் சிறந்த இந்திய நடிகரான சிவாஜிக்கு அரசியலில் நடிக்கத் தெரியாது என்பதை அவரது ஒவ்வொரு அரசியல் முடிவுகளும் எடுத்துக்காட்டுகின்றன. காமராஜரின் மறைவுக்குப் பிறகு இந்திரா காங்கிரஸை ஆதரித்தது தவறான முடிவு என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் பேசுகிறது. ‘ஏற்றுக்கொண்ட தலைமைக்கு சிவாஜி இறுதிவரை விசுவாசமாகவே இருந்தார். காங்கிரஸ் தன்னை மட்டம் தட்டியபோதெல்லாம் மனம் சோர்ந்துவிடாமல் அவமானங்களைத் தூக்கி எறிந்துவிட்டு தலைமைக்கு உண்மையாக இருந்தார்’ என்கிற வரிகள் நடிப்பில் உயர்ந்து விளங்கிய அவர் அரசியல் எனும் படிக்கட்டில் அடி எடுத்து வைக்காமலே இருந்திருக்கலாம் என்றே எண்ணவைக்கிறது.

சிவாஜி ஆளுமை

(3-ம் பாகம்)

மு.ஞா.செ.இன்பா

கைத்தடி பதிப்பகம்

பாலவாக்கம்,

சென்னை-41.

விலை: ரூ.350

 9566274503

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x