Last Updated : 06 Oct, 2018 09:57 AM

 

Published : 06 Oct 2018 09:57 AM
Last Updated : 06 Oct 2018 09:57 AM

அரசியல் அதிகாரத்தில் பெண்கள்

ஒருவரின் பாலினம் ஒரு அரசியல் அடையாளம் என்றால் அவரது சாதி மற்றுமொரு அரசியல் அடையாளம். இவை இரண்டும் சேரும்போது என்ன நிகழ்கின்றன என்பதை இந்த ஆராய்ச்சி கூறுகிறது. ஒடுக்கப்பட்டோர், பெண்கள், பொது என்ற மூன்று வகை பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல்கள் உள்ளன. பொதுத் தொகுதியில் மேல்தட்டுப் பெண்கள் குறைவாகவே போட்டியிடுகின்றனர். ஆனால், ஒடுக்கப்பட்டோர் தொகுதியில் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். பெண்கள் தொகுதிகளிலும்கூட மேல்தட்டுப் பெண்கள் குறைவாகவே போட்டியிடுகிறார்கள். பின்தங்கிய வகுப்பினர், ஒடுக்கப்பட்டோர் பிரிவுகளிலிருந்து அதிக விகிதாச்சாரத்தில் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் பெண்கள் ஈடுபடுவதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ஒரு கிராமம் பிற இடங்களுடன் தங்களைப் பிணைத்துக்கொள்ள உதவும் சாலைத் தொடர்புகள் ஒரு கிராமத்துக்கு முதன்மையான தேவையாக இருக்கின்றன. பிற்படுத்தப்பட்டோர் தலைவராக உள்ள பஞ்சாயத்துகளில் சாலை வசதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக, பெண்கள் தலைவர்களாக உள்ள பஞ்சாயத்துகளில் சாலைக்கான முக்கியத்துவம் இன்னும் அதிகம் என்று இந்த ஆராய்ச்சி முடிவு காட்டுகிறது.

Guilhem Cassan, Lore Vandewalle ‘Political reservations for women and policy influence of low-castes in India’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x