Published : 06 Oct 2018 10:00 AM
Last Updated : 06 Oct 2018 10:00 AM

நூல் நோக்கு: புதிய களத்தில் புதிய கதைகள்

கார்த்திக் பாலசுப்ரமணியனின் முதல் தொகுப்பான‌ ‘டொரினா’விலுள்ள 12 கதைகளும் எளிய கதைகள் அல்லது 12 உண்மைகள். வீட்டைவிட்டு வெளியேறிய சொந்தங்கள், யோசிக்காமல் எதிர்வினையாற்றுபவர்கள், துணை இழந்த முதியவர்கள் என நமக்குத் தெரிந்திருக்கும் ஜீவன்கள்தான் இத்தொகுப்பின் பாத்திரங்கள். பின் ஏன் ‘டொரினா’? ஏனென்றால், நம்மிடமிருந்து பிரிந்தவர்களை, தொலைத்தவர்களை, நினைவுகளின் ஓரத்தில் கிடக்கும் விஷயங்களை எடுத்துவந்து நம் முன் நிறுத்துகிறது. இத்தொகுப்பின் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கதைகள் முக்கியமானவை. ஐடி துறையில் வேலைபார்க்கும் பெண்கள் எத்தகைய மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள், அங்கே உணர்வுகளுக்கு என்ன மரியாதை என்பதை உண்மையாகப் பேசுகிறது. ஐடி சார்ந்து நம்மிடையே உருவாகியிருக்கும் பொதுபிம்பத்தை இக்கதைகள் உடைக்கின்றன.

டொரினா

கார்த்திக் பாலசுப்ரமணியன்

யாவரும் பதிப்பகம்

வேளச்சேரி, சென்னை-42.

விலை: ரூ.100

  90424 61472

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x