Last Updated : 13 Oct, 2018 08:52 AM

 

Published : 13 Oct 2018 08:52 AM
Last Updated : 13 Oct 2018 08:52 AM

பிறமொழி நூலகம்: ஊழல்: ஒரு கூராய்வு

மூத்த பத்திரிகையாளரும் புலனாய்வு இதழியலின் முன்னோடியுமான என்.ராமின் இந்நூல், தனிமனிதனின் தாகத்தில் தொடங்கி எங்கும் நீக்கமற நிறைந்து சமூகத்தைச் சீரழித்துவரும் ‘ஊழல்’ என்ற புற்றுநோயை ஆராய முனைகிறது. சர்வதேசப் பின்னணியில் இந்தியாவில் வேகமாகப் பரவியுள்ள ஊழலின் கதையையும் வரலாற்றையும் தத்துவார்த்தப் பின்னணியில் எடுத்துரைக்கிறது. முன்னாளில் பெரிதாகப் பேசப்பட்ட போஃபர்ஸ் ஊழல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ‘அறிவியல்பூர்வமாக’ நடத்தப்பட்டுவரும் ஊழல் நடவடிக்கைகள் போன்றவற்றை ஆராய்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்த சட்டம், அமலாக்கத்திறன், கொள்கைகள், கண்காணிப்பு, ஊடகம், அரசியல் துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய குறைந்தபட்ச நடவடிக்கைகளை ஆலோசனைகளாக முன்வைக்கிறது. இந்நூல் ஊழல் பற்றிய புரிதலை உருவாக்குவதோடு அதற்கு எதிராகச் செயல்படுபவருக்கான கையேடாகவும் திகழ்கிறது.

ஒய் ஸ்காம்ஸ் ஆர் ஹியர் டு ஸ்டே

என்.ராம்

அலெப் வெளியீடு

7/16, அன்சாரி ரோடு,

தார்யாகஞ்ச், புதுடெல்லி-110002.

விலை: ரூ.399

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x