Published : 25 Oct 2018 10:04 AM
Last Updated : 25 Oct 2018 10:04 AM

பிரமிளைக் கண்டுகொண்ட தருணம்

எழுபதுகளின் இறுதியில் இலக்கிய உலகுக்குள் அடியெடுத்து வைத்தவர் விமலாதித்த மாமல்லன். தமிழ் இலக்கியவாதிகள் பிரமிளின் படைப்புகளைப் பிரமிப்போடு பார்க்க ஆரம்பித்திருந்த காலம் அது. ஆனால், அவை பாராட்டுகளாக இருந்தனவே தவிர, பிரமிளின் படைப்புகள் குறித்து நுட்பமான விவாதங்களாய் அமையவில்லை.  மாமல்லனுக்கும் பிரமிளைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்திருக்கிறது. கடைசியில், அவர் பிரமிளைக் கண்டுகொண்டது ஓர் ஓவியத்தின் வழியாக.

முரளிதரனின் ஓவியத்தைப் பார்த்த மாமல்லன் அது ‘‘புரியவில்லை’’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு ‘‘ஓவியத்துல புரிய என்ன இருக்கு? இந்தக் காட்சி கொடுக்கிற உணர்வு உனக்குத் தொத்தினா உண்டு, இல்லேன்னா இல்லே’’ என்றிருக்கிறார் முரளிதரன். இந்த உரையாடலில் மாமல்லனுக்குப் பிரமிள் பிடிபட்டுவிட்டார். பிறகு, பிரமிளுடன் நேரடியாகப் பழகும் சந்தர்ப்பமும் மாமல்லனுக்கு வாய்த்திருக்கிறது. ஒருநாள் நோக்கம் ஏதுமின்றி வெறுமனே இருவரும் நடந்து போய்க்கொண்டிருக்கையில், ‘ஒரு நூற்றெட்டு அரிவாள் நிழல்கள் பறக்கும் அறுவடை வயல்வெளியில்’ எனத் தொடங்கும் ‘கன்னி’ கவிதை பற்றி, “என்ன பிரமாதமான காட்சி!” என்று சிலாகித்திருக்கிறார் மாமல்லன்.

அதற்கு, “விவிட் எக்ஸ்பீரியன்ஸ்” என்ற பிரமிள், “நீயெல்லாம் இதைப் பற்றியெல்லாம் எழுதணும்” என்றிருக்கிறார். தான் அதிகம் படிப்பவன் இல்லை என்று தயங்கிய மாமல்லனிடம், “படிப்பு முக்கியம்தான். ஆனா, படிப்பதை உணர்வதும் உணர்ந்ததைச் சொல்லவருவதும் அதைவிட முக்கியம்” என்றிருக்கிறார் பிரமிள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x